பாய் வீட்டு பிரியாணி மசாலா செய்வது எப்படி? – Muslim Biryani Secret Masala Powder Recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது அசைவ உணவுகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ஓன்று தான் பிரியாணி, இந்த பிரியாணியின் மனம் மற்றும் சுவையை கூட்டுவதே அவற்றில் சேர்க்கப்படும் பிரியாணி மசாலா தான். குறிப்பாக பாய் வீடுகளிலும் சரி, அவர்கள் நடத்தும் விசேஷங்களில் சரி அவர்கள் செய்யும் பிரியாணி நல்ல நறுமணத்திலும், நல்ல சுவையிலும் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் வீட்டிலேயே தயார் செய்யும் பிரியாணி மசாலா தான் காரணம். இந்த மசாலாவை வீட்டில் எப்படி தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பாய் வீட்டு பிரியாணி மசாலா செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- பட்டை – 50 கிராம்
- கிராம்பு – 25 கிராம்
- ஏலக்காய் – 25 கிராம்
பிரியாணி மசாலா செய்யும் முறை:
- பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இவை மூன்றையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் வெயிலில் காயவைக்க வசதி இல்லை ஏற்றல் ஒன்றும் பிரச்சனை இல்லை அடுப்பில் வாணலியை வைத்து நன்கு சூடுபடுத்தவும்.
- வாணலி நன்கு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை இவை முன்றியும் சேர்த்து ஒரு 5 நிமிடம் கவனமாக கருகிவிடாமல் வறுக்கவும்.
- பிறகு அதனை மிக்சி ஜாரில் செய்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்தால் போதும் பிரியாணிக்கு சுவையூட்டும், பிரியாணி மசாலா தயார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கரம் மசாலா பொடி இப்படி பக்குவமா மணக்க மணக்க அரைச்சு வைங்க..!
பயன்படுத்தும் முறை:
- ஒருகிலோ அரிசி, ஒரு கிலோ மட்டன் என்றால் நீங்கள் தாராளமாக இந்த பிரியாணி மசாலாவை இரண்டு ஸ்பூன் வரை பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.
- அதுவே ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சிக்கன் என்றால் இந்த பிரியாணி மசாலாவை ஒரு ஸ்பூன் வரை பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.
- அதுவே வெஜ் பிரியாணி, கிரேவி, குருமா மற்றும் குருமா குழம்பு இது போன்று செய்கிறீர்கள் என்றால் இந்த பிரியாணி மசாலாவை 1/2 ஸ்பூன் வரை பயன்டுத்தி கொள்ளலாம்.
- மற்றபடி மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா இவையெல்லாம் செய்யும் போது இந்த பிரியாணி மசாலாவை 1/4 ஸ்பூன் அளவு பயன்படுத்தலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |