Egg Chilli Recipe in Tamil
பொதுவாக சமையலில் சைவம் மற்றும் அசைவம் என இரண்டு மாதிரியான பிரியர்கள் உள்ளார்கள். அந்த வகையில் அசைவம் பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட முட்டையினை சாப்பிடுவார்கள். ஏனென்றால் முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதனால் அதனை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி முட்டையில் ரெசிபி செய்தாலும் கூட முட்டை வறுவல், பொரியல், ஆம்லெட், பொடிமாசு என இவற்றை மட்டுமே வித விதமாக செய்து சாப்பிடுவார்கள். எத்தனை நாள் தான் இதுமாதிரி ஒரே ரெசிபியை சாப்பிடுவது என்று சலித்து கொள்வார்கள். ஆனால் இனி நீங்கள் சலிப்பே இல்லாமல் முட்டையினை ரசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றியான குறிப்பினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க சுவையான முட்டை சில்லி செய்வது என்று பார்க்கலாம்..!
முட்டை சில்லி செய்முறை விளக்கம்:
பொருட்களின் அளவு |
செய்முறை விளக்கம் |
முட்டை- 4 |
முதலில் 4 முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். |
முட்டையை வேக வைத்தல் |
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு நீளமான பாக்சில் எண்ணெய் தடவி அதில் வெள்ளை கருவை சேர்த்து மூடி தண்ணீரில் வைத்து வேக விடுங்கள். |
முட்டை பீஸ் |
அடுத்து வேக வைத்துள்ள முட்டையினை சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து விடுங்கள். |
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் |
அதன் பிறகு ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் இந்த 4 பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளுங்கள். |
சோள மாவு- 1/4 கப் |
மைதா மாவு- 1/4 கப் |
உப்பு- தேவையான அளவு |
நறுக்கிய முட்டையை சேர்த்தல் |
கடைசியாக கலந்து வைத்துள்ள மசாலாவுடன் நறுக்கிய முட்டையினை சேர்த்து கலந்து விடுங்கள். |
முட்டை பீஸை பொறித்தல் |
இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து மசாலா தடவிய முட்டையை சேர்த்து பொறித்து எடுத்து கொள்ளவும். |
இஞ்சி- நறுக்கியது |
பின்பு அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகை பொறிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு என எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள். |
பூண்டு- 6 பல் |
பச்சை மிளகாய்- 5 |
காய்ந்த மிளகாய்- 4 |
கடுகு- 1 ஸ்பூன் |
வெங்காயம்- 3 |
கறிவேப்பிலை- சிறிது |
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் |
5 நிமிடம் கழித்து கடையில் உள்ள பொருளுடன் இந்த தூள் அனைத்தையும் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் வரை வதக்க வேண்டும். |
சீரகத்தூள்- 1/4 ஸ்பூன் |
கரம் மசாலா- 1/2 ஸ்பூன் |
தக்காளி- 1 |
பொறித்த முட்டை |
பின்பு 10 நிமிடம் கழித்து பொறித்த முட்டை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கடாயிலேயே 5 நிமிடம் வரை இருக்க விட்டு பின்பு இறக்கினால் போதும் முட்டை சில்லி தயார். |
உப்பு- தேவையான அளவு |
எலுமிச்சை சாறு- சிறிது |
மணக்கும் சுவையில் அசத்தலான ஐயர் வீட்டு இட்லி பொடியை இப்படி செய்யுங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |