பிரிட்ஜ் இல்லாமலே முட்டை 15 நாட்கள் வரைக்கும் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமா.?

Advertisement

6 மாதம் ஆனாலும் முட்டை கெடாமல் இருக்க டிப்ஸ்

அசைவம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது. அசைவம் எடுக்க முடியாத சூழ்நிலையில் முட்டை வாங்கி வந்து சமைப்பார்கள். இருந்தாலும் அடிக்கடி கடைக்கு போவதற்கு அலுப்பு படுவார்கள். முட்டையை வாங்கி வந்த இரண்டு நாட்களுக்கும் சமைத்திட வேண்டும் இல்லையென்றால் வீணாகி விடும். பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் மொத்தமாக வாங்கி வந்து  வைத்திருப்பார்கள், அதுவே பிரிட்ஜ் இல்லாதவர்கள் வீட்டில் எப்படி முட்டையை கெடாமல் வைத்திருப்பது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முட்டை கெடாமல் இருக்க டிப்ஸ்:

6 மாதம் ஆனாலும் முட்டை கெடாமல் இருக்க டிப்ஸ்

முதலில் முட்டை வாங்கி வந்ததும்  சுத்தமாக கழுவ வேண்டும். இதனை கழுவதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரில் முட்டையை சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும்.

அதன் பிறகு கழுவி வைத்துள்ள முட்டையை ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.

முட்டையை துடைத்த பிறகு ஒரு 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

அதன் பிறகு நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயிலிருந்து ஒரு எண்ணெயை எடுத்து கொள்ளவும். எந்த எண்ணெயாக இருந்தாலும் பரவாயில்லை எடுத்து கொள்ளலாம்.

கழுவி வைத்துள்ள முட்டை முழுவதும் எடுத்து வைத்துள்ள எண்ணெயை தடவி கொள்ளவும். எல்லா முட்டிகளிலும் எண்ணெயை தடவி கொள்ளவும்.

அடுத்து முட்டை ஸ்டார் செய்து வைக்கும் டப்பாவை எடுத்து கொள்ளவும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள முட்டையை வைக்க வேண்டும். இந்த முட்டையில் கூர்மையான பகுதி கீழ் பகுதியில் இருக்குமாறு பார்த்து வைக்க வேண்டும்.

இந்த பாக்ஸை பிரிட்ஜில் வைத்தால் 6 மாதம் வரைக்கும் முட்டை கெட்டு போகாமல் இருக்கும், அதுவே பிரிட்ஜில் வைக்காமல் இருந்தால் 12 நாட்கள் வரைக்கும் முட்டை கெட்டு போகாமல் இருக்கும்.

இனி உங்க வீட்டில் இருக்கும் Fan-யில் ஒரு தூசி கூட இருக்காது.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement