நாய் குட்டிகளை பராமரிக்க சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

Advertisement

நாய் வளர்ப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நாய்குட்டிகளை எப்படி பராமரிப்பது என்று தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை நாய் குட்டிகளை அதிகம் விரும்புவார்கள், அந்தவகையில் நாய் குட்டிகளை வாங்கி வீட்டில் வளர்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள், சிலர் வீட்டிற்கு காவல்களுக்கவும் வளப்பார்கள், ஆனால் நாய் குட்டிகளுக்கு எப்படி எந்த உணவு கொடுக்க வேண்டும் என்று சிலர்க்கு தெரிவதில்லை, இதனால் நாய்களுக்கு முடி உதிர்வு, சிரங்குகள் ஏற்படுகிறது. மேலும் நம் பதிவில் நாய்குட்டிகளை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

நாய்கள் பற்றிய தகவல்

 

நாய் குட்டி பராமரிப்பு:

 dog valarpathu eppadi

நாய் குட்டியை வளர்ப்பவர்கள் தினமும் நாய் குட்டிகளை சுத்தம் செய்வது அவசியம். வாரத்தில் மூன்று முறையாவது ஷாம் உபயோகித்து குளிக்க வைப்பது அவசியம். அவற்றின் முகம், கண், காது போன்றவற்றை பராமரிப்பது நல்லது.

நாய் குட்டிகளின் முடி மற்றும் தோல் பகுதிகளை பராமரித்து வைப்பது அவசியம். நாய்க்குட்டிகளை பராமரிப்பதற்கு நக வெட்டிகள், ஷாம், சோப், சீப்பு, டவல் போன்றவை அதற்கு மட்டும் தனியாக வைத்துக்கொள்வது அவசியம்.

இதற்கு உணவு வைக்கும் பாத்திரங்களை தூய்மையாக வைக்க வேண்டும், அதோடு உணவிற்கு ஒரு பாத்திரமும், தண்ணீருக்கு ஒரு பாத்திரமும் வைக்க வேண்டும்.

நாய் குட்டி இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும். அதோடு நாய் குட்டிகள் இருக்கும் இடத்தில் மின்சாரம் சமபந்தப்பட்ட பொருட்கள் இருக்கும் இடத்தில் நாய் குட்டிகளை கட்டி போட்டு வைக்க கூடாது. அதேபோல் உடைந்த பொருட்கள் ஏதும் இல்லாத இடமாக இருக்கவேண்டும்.

வேதிப்பொருட்கள் மற்றும் நச்சி பொருட்களை கொண்டு நாய் குட்டிகள் இருக்கும் தரைகளை சுத்தம் செய்ய கூடாது.

நாய் குட்டி உணவு:

 naai kutty valarpathu eppadi

நாய் குட்டிகளுக்கு 20 நாட்கள் வரையும் பால், தயிர் சாதம், வேகவைத்த காய்கறிகள் சாதம் போன்றவற்றை கொடுக்கலாம்.  உணவு பழக்கங்களை திடீர் என்று மாற்றிகொள்ளாமல், சில நாட்கள் கழித்து மாற்றிக்கொள்ளலாம்.

நாய் குட்டிகள் கொஞ்சம் வளர்ந்ததும் சிக்கன், மட்டன், நெஞ்சுக்கறி, தொடைக்கறி போன்றவற்றை வேகவைத்து சாதத்தில் கலந்து கொடுக்கலாம். அதோடு முட்டை, மீன் வகைகள் போன்றவற்றை வாரத்தில் ஒரு முறையாவது இரண்டு முறையாவது கொடுத்து வரலாம்.

முக்கியமாக நாய்க்குடிகளுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் திராட்சை, வெங்காயம், டீ, சாக்லேட், இஞ்சி, காளான், சோயா, சோளம், கோதுமை போன்றவற்றை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை நாய் குட்டிகளுக்கு கொடுப்பதை முழுமையாக தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் நாய்களுக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறையாவது உணவுகள் கொடுக்கவேண்டும். உணவுகளின் அளவானது நாய்க்குட்டிகளின் எடை, பாலினம் மற்றும் இனத்தை பொறுத்ததே அமையும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement