Namak Para Recipe in Tamil
தீபாவளி என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஸ்வீட் தான். வீட்டில் உள்ள பெண்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இன்றிலிருந்து பேச ஆரம்பிப்பார்கள். என்ன பலகாரம் செய்ய போகிறீங்க கேட்பார்கள். அவர்கள் எதாவது வித்தியசமாக செய்ய போகிறார்கள் நீங்கள் அந்த ரெசிபியை செய்யாமல் வேறு ஒரு ரெசிபியை செய்வீர்கள். புதிதாக ரெசிபி செய்ய வேண்டும் நினைத்தால் மொபைலில் தான் தேடுவீர்கள். அதனால் தான் இந்த கோதுமை மாவு ஒரு அருமையான ரெசிபியை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
நமக் பர செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் | செய்முறை |
கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஒரு கப் | முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் கோதுமை மாவை 1 கப் சேர்த்து கொள்ளவும், அதனுடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சீரகம் 1/4 தேக்கரண்டி, வெண்ணைய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதாவது பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். |
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி | 10 கழித்து முழு மாவையும் சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து கொள்ள வேண்டும். |
சீரகம்- 1/4தேக்கரண்டி | அதன்பிறகு அதனை உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். |
வெண்ணெய்- தேவையான அளவு | அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி கொள்ளவும். |
எண்ணெய்- 1/2 லிட்டர் | எண்ணெய் சூடானதும் நாம் கட் செய்து வைத்துள்ள பீஸ்களை சேர்த்து வேக விடவும். இருபுறமும் சிவந்த நிறம் வந்ததும் எடுத்து தனியாக கிண்ணத்தில் வைத்து விட வேண்டும். |
15 நிமிடத்தில் சுவையான மசாலா பட்டை செய்முறை விளக்கம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |