அந்துருண்டை பயன்படுத்தினால் நல்லதா கெட்டதா? | Naphthalene Balls Side Effects in Tamil
நண்பர்களே வணக்கம் அனைவரின் வீட்டிலும் பிரோல் இருக்கும். அப்படி என்றால் இந்த பொருள் இல்லாமல் வீடு இருக்க வாய்ப்பே இல்லை..! அப்படி என்ன பொருள் தெரியுமா அந்துருண்டை தான். இது முகர்ந்துகொள்ள அவ்வ்ளவு சூப்பராக இருக்கும். அதேபோல் அது அதிகளவு அனைவரும் பயப்படுத்தி வருகிறார்கள். அதனுடைய நறுமணம் போல் அது நமக்கு நன்மையை அளிக்குமா என்று யோசித்து பாருங்கள். இது வீட்டில் பயன்படுத்த இரண்டு காரணம் உள்ளது காரப்பாம்பூச்சிக்காகவும், மற்றொன்று துணி நறுமணம் வீசும் என்ற இரண்டு காரணம் தான். இப்படி அதனை பயன்படுத்துவதால் நமக்கு எவ்வளவு தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அந்துருண்டை தீமைகள்:
- இந்த அந்துருண்டை கற்பூரம் போல் காற்றில் கரைந்துபோகக்கூடிய பொருள் இது நிலக்கரி தாரை ஊருக்கும் போது கிடைக்கும் நாப்தலீன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வரக்கூடிய வாயுவு கண்ணுக்கு தெரியாத பூச்சியை மட்டும் கொள்ளகிறது என்று அனைவருமே நினைத்திருப்போம். ஆனால் அதை விட உயிரை மெதுவாக கொள்கிறது.
- நாம் தான் வீட்டில் அதனை அதிகம் பயன்படுத்தி வருகிறோம் வீட்டை சுற்றி வரும் வாயுவு நம்மையும் மெதுவாக கொன்று வருகிறது. அதாவது அதில் அவ்வளவு தீமைகள் உள்ளது.
- முக்கியமாக குழந்தையை போர்த்து வைக்கும் துணியில் அதனை வைக்காதீர்கள். அப்படி வைக்கும்பட்சத்தில் குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்குகிறது.
- அதைவிட முக்கியமாக கற்பினின் பெண்களின் இதனை அதிகம் சுவாசிக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அதிக பாதிப்பை அளிக்கிறது. முக்கியமாக மரபணு பிரச்சனை, கருச்சிதைவு, அறிவு திறன் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- குழந்தைகளுக்கு தேவைப்படும் சத்துக்களை குறைத்து புற்றுநோய் வர வழிவகுக்கிறது. என்று சர்வதேச கேன்சர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கலில் ஹீமோகுளோபின் அளவை குறைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பாதிக்கிறது.
- இது போன்ற ரூம் ஸ்பேர மற்றும் நறுமண பொருட்கள் நமக்கே தெரியாமல் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.
- அதிலும் அதில் காணப்படும் ரசாயன பொருட்கள் மனிதனுக்கு தலைவலி, தலை சுற்றல், வாந்தி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- சில நாடுகளின் இந்த அந்துருண்டையை தடைசெய்யப்பட்டுள்ளது. இது உடலில் உள்ள இரத்த அணுக்களை நேரடியாக பாதிக்கிறது என்பதனால் இதை தடை செய்யப்பட்டுள்ளது.
தினமும் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |