Natural Bathroom Cleaner in Tamil
வீட்டில் கீளின் செய்வதோடு இல்லாமல் பாத்துரூம் கூட நாம் தான் சுத்தம் செய்ய வேண்டியாக உள்ளது என்று புலம்புவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை படித்து விட்டு வீட்டில் ட்ரை பண்ணிப்பாருங்க உங்களுக்கு தெரியும் அது எப்படி என்று? மிகவும் ஈசியாக இருக்கும்..! கடையில் எந்த ஒரு கிளீனிங் பொருளையும் வாங்க தேவையே இருக்காது. வாங்க அப்படி என்ன பொருளை கொண்டு கிளீன் செய்ய போறும் என்று இப்போது பார்ப்போம்..!
Natural Bathroom Cleaner in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
- கல் உப்பு – கொஞ்சம்
- தண்ணீர் – 2 லிட்டர்
- பேங்கி சோடா – 5 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
ஸ்டேப்: 1
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அதன் பின் அதில் நாம் எடுத்துவைத்துள்ள பேங்கி சோடாவை போட்டுக்கொள்ளவும். அடுத்து அதன் கூடவே உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 2
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் சேர்த்து அதனை நன்கு கலந்துவிடவும். எலுமிச்சை சாறு சேர்த்த பின் அது பொங்கி வரும் அதனை நன்கு கலந்துவிடவும்.
ஸ்டேப்: 3
அடுத்து நாம் எடுத்துவைத்துள்ள 2 லிட்டர் தண்ணீரை அதில் சேர்த்து இரண்டு பொருட்களும் கரையும் வரை கலந்துவிடவும். அவ்வளவு தான் கிளீனர் ரெடி ஆகிட்டு அதனை பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!
பயன்படுத்தும் முறை:
முதலில் பாத்துரூமில் அனைத்து பக்கமும் தெளித்து விடவும். அது அப்படியே 15 நிமிடம் ஊறவிடவும். அதன் பின் பிரஷை வைத்து தேய்த்து விட்டால் புது டைல்ஸ் போல் மாரி விடும் உங்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. சிலருக்கு செயற்கை பொருட்களை வைத்து கிளீன் செய்யும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இப்படி இயற்கையாவே கிடைக்கும் கொண்டு சுத்தம் செய்வதால் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.
இதனை வீட்டின் டைல்ஸ் சுவரில் கூட பயன்படுத்தலாம் அது எப்படி என்றால் முதலில் ஸ்பிரே பாட்டிலில் இந்த கிளீனரை ஊற்றி வீட்டின் சுவரில் ஸ்பிரே செய்து கம்பி நாரை வைத்தோ அல்லது சுத்தம் செய்யும் பொருளை வைத்து சுத்தம் செய்தால் சுவர் வெண்மை நிறமாக மாறிவிடும். இதனை வீட்டில் செய்துபாருங்கள்..!
பல வருடமாக உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை இப்படி கூட சூப்பரா சுத்தம் செய்யலாமா…!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |