வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை செய்யுங்க போதும்..!

Advertisement

Natural Cockroach Killer Spray in Tamil

பொதுவாக ஒரு சிலரின் வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்திற்கு அடிக்கடி குறைபாடு ஏற்படும். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை சரியாக தான் இருக்கும். இருப்பினும் உடல் நலத்தில் ஏன் இவ்வாறு குறைபாடு ஏற்படுகின்றது என்று புரியாது. இதற்கு காரணம் உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவில் உள்ளது என்றாலும் இந்த மாதிரி உடல் நல குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆம் நண்பர்களே அதனால் தான் இன்றைய பதிவில் கரப்பான் பூச்சி தொல்லையை போக்குவதற்கு உதவும் எளிமையான குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் கரப்பான் பூச்சிகளின் தொல்லையை எவ்வாறு போக்குவது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Homemade Cockroach Killer Spray in Tamil:

Homemade Cockroach Killer Spray in Tamil

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் கரப்பான் பூச்சிகளின் தொல்லையை போக்குவதற்கு உதவும் எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

  1. ஷாம்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
  4. அந்துருண்டை – 4
  5. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
  6. தண்ணீர் – 10 டேபிள் ஸ்பூன்
  7. ஸ்ப்ரே பாட்டில் – 1

உங்க வீட்டில் கொசுக்களை விரட்ட ஒரு பைசா கூட செலவில்லாமல் வீட்டிலேயே கொசு விரட்டி லிக்விட் தயாரிப்பது எப்படி தெரியுமா

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன்  ஷாம்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடாவினை சேர்க்கவும்:

பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அந்துருண்டையினை எடுத்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 அந்துருண்டையினையும் நன்கு பொடியாக செய்து சேர்த்து கொள்ளவும்.

வீட்டின் சுவர் மற்றும் தரையை சட்டுனு கிளீன் செய்ய இதை ட்ரை பண்ணுங்க

சர்க்கரையை கலக்கவும்:

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தண்ணீரை கலந்து கொள்ளவும்:

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 டேபிள் ஸ்பூன் தண்ணீரை கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான்பூச்சி தொல்லை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் இதனை ஸ்ப்ரே செய்யுங்கள்.

இதனை வாரத்தில் இரு முறை செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையே இருக்காது.

கைவலிக்க தேய்காமல் பாத்ரூம் பைப்புகளில் படிந்துள்ள கறைகளை 5 நிமிடத்தில் போக்க இதை ட்ரை பண்ணுங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement