Natural Remedy To Get Rid of Beetles in Tamil
நாம் என்னதான் வீட்டை சுத்தமாக வைத்து கொண்டாலும், வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களின் வாசனையால் வீட்டிற்குள் பூச்சிகள் வரும். அதுவும் இரவு நேரங்களில் கொசு மற்றும் வண்டின் தொல்லை அதிகமாக இருக்கும்.. எனவே, கொசுவை விரட்டுவதற்கு பல வழிகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வீட்டிற்குள் வண்டு வந்தால் என்ன செய்வது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் வண்டு வந்தால் என்ன செய்வது..? என்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Rid of Beetles Home Remedy in Tamil:
வேப்பிலை புகை:
மழைக்காலம் வந்துவிட்டாலோ அல்லது ஒரு நல்ல மழை பெய்தாலே போதும் வண்டுகள் வீட்டிற்குள் வர தொடங்கிவிடும். எனவே இதனை தடுக்க இயற்கையாக உள்ள ஒரு பொருளை பயன்படுத்த போகிறோம். அது வேறொன்றுமில்லை வேப்பிலை தான்..வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்று அனைவரும் அறிந்த ஒன்றே..
வேப்பிலையை காயவைத்து அதனை ஒரு சட்டியில் போட்டு புகைக்க வேண்டும்.
இந்த புகையை வீட்டின் முன் மற்றும் பின் பகுதியில் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டிற்குள் பூச்சிகள் வராது.
ஈக்களை அடியோடு விரட்ட இதை மட்டும் ஒரு சொட்டு ஊற்றினால் போதும்..
வேப்பிலை பேஸ்ட்:
வேப்பிலையை நன்கு அரைத்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வீட்டின் முன் வாசல், பின்வாசல் மற்றும் வீட்டின் மூலைகளில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வேப்பிலையின் வாசனையை கண்டு வண்டுகள் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வராது.
மேலும், வேப்பிலை பேஸ்டை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து வண்டுகள் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலமாகவும் வீட்டிற்குள் வண்டுகள் வருவதை தடுக்கலாம்.
துளசி ஸ்ப்ரே:
துளசியின் மருத்துவ குணத்தை சொல்லி தெரியவேண்டியதில்லை.. துளசி இருக்கும் இடம் சுத்தமாக இருக்கும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் துளசி செடிகளை வளர்த்து வருவார்கள். எனவே இந்த துளசியினை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை வீட்டின் முன் வாசல் மற்றும் வீட்டின் உட்பகுதியில் தெளித்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தால் போதும் துளசியின் வாசனையை கண்டு வண்டுகள் வீட்டிற்குள் வராது.
வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வருவதை தடுக்க இந்த எண்ணெயில 2 சொட்டு ஊத்துங்க போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |