Natural Repellent for Flies in Tamil
பொதுவாக நமது வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து நம்மை மிக மிக தொல்லை செய்யும் உயிரினங்களில் ஒன்று தான் இந்த ஈக்கள். அதாவது இவை நமது வீட்டிற்கு ஒரு அழையா விருந்தாளியாக வருவது மட்டுமில்லாமல் நமது உணவுகள் மற்றும் மற்ற இடங்களில் உட்கார்ந்து அங்கெல்லாம் அதிக அளவு கிருமிகளை பரப்புகின்றன. இவை உட்கார்ந்து சென்ற உணவுகளை நாம் அறியாமல் சாப்பிடுவதால் நமக்கு பலவகையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதனால் அவற்றை நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு அவையாவும் தோல்வியையும் சந்திச்சிருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து நம்மையே தொல்லை செய்யும் ஈக்களை ஓடஓட விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies for Flies in Tamil:
உங்களின் வீட்டிற்கு வந்து உங்களின் சுகாதாரத்தை கெடுத்து உங்களை தொல்லை செய்யும் ஈக்களை ஓடஓட விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு அறிந்து கொள்ளவோம் வாங்க
அதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அதனை பார்க்கலாம்.
- நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
- ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- சலவை தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- பிளாஸ்டிக் பாட்டில் – 1
வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சலவை தூளை சேர்க்கவும்:
பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சலவை தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தண்ணீரை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வீடு எப்பொழுதும் கமகமன்னு நறுமணத்துடன் இருக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்
பயன்படுத்தும் முறை:
இப்பொழுது நாம் எடுத்து வைத்துள்ள 1 பிளாஸ்டிக் பாட்டிலின் நடுப்பகுதியில் சிறிய சிறிய துளைகளை போட்டு கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் கலந்து வைத்துள்ள கலவையை அதன் நடுப்பகுதி வரை ஊற்றி அதனுடைய முடியை போட்டு நன்கு மூடி கொள்ளுங்கள்.
பிறகு இதனை உங்கள் வீட்டில் எங்கு எல்லாம் அதிகம் ஈக்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் வைத்து கொள்ளுங்கள். ஈக்கள் அனைத்தும் அந்த துளைகள் வழியாக உள்ளே சென்று நாம் கலந்து வைத்துள்ள கலவையில் விழுந்து இறந்து விடும்.
பின்னர் அதனை எடுத்து நீங்கள் கீழே ஊற்றி விடலாம்.
உங்களின் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |