Natural Repellent for Mosquito in Tamil
பொதுவாக மழை காலம் வந்துவிட்டாலே மழை சரியாக பெய்கின்றோதோ இல்லையோ நாம் அனைவரின் வீட்டிற்கும் அழையா விருந்தாளியாக இந்த கொசுக்கள் மட்டும் கண்டிப்பாக வந்துவிடும். அப்படி வருவதை விட கொடுமை என்ன வென்றால் நமது வீட்டிற்கு வந்து நம்மையே நறுக்கு நறுக்கு என்று கடித்து நமது இரத்தத்தை ருசித்து ரசித்து குடிக்கும். அதனை விரட்டுவதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு அவையாவும் தோல்வியையும் சந்திச்சிருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Easy Homemade Mosquito Repellent in Tamil:
உங்க வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து உங்களை மிக மிக தொல்லை செய்யும் கொசுக்களை வீட்டில் இருந்து விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- சூடம் – 4
- கிராம்பு – 6
- தேங்காய் எண்ணெய் – 1 கப்
- பெரிய வெங்காயம் – 1
- திரி – 1
வீட்டில் ஒரே பல்லி தொல்லையா அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது
கடாயை எடுத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 கைப்பிடி அளவு வேப்பிலையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
சூடத்தை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 4 சூடத்தை நன்கு பொடியாக செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
கிராம்பினை சேர்க்கவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 6 கிராம்பினையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் இதை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் தொல்லை செய்யும் எலியை நிரந்தமாக விரட்ட அரிசி மாவு மட்டும் போதும்
பயன்படுத்தும் முறை:
இப்பொழுது நாம் எடுத்து வைத்துள்ள 1 பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் நடுவில் உள்ள பகுதியில் குழி போல நறுக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நாம் தயாரித்து வைத்துள்ள எண்ணெயில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி திரியை போட்டு ஏற்றி கொள்ளுங்கள். இதை உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கொசுக்கள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா அப்போ இதை செய்யுங்க போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |