Natural Room Freshener Spray in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு நாம் அனைவருக்குமே மிக மிக பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஒரு சிலருக்கு அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படும். அவர்கள் நன்கு ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் சுற்றுசூழல் மாசுப்பட்டதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் வீட்டின் சுற்றுசூழல் அவ்வளவாக சுத்தமாக இருக்காது. அப்படி சுத்தமாக இருந்தாலும் அவர்களின் வீட்டில் ஏதாவது ஒருசில துறுநாற்றங்கள் வீசும். இந்த துறுநாற்றத்தினால் சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ரூம் ஸ்ப்ரே தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How to make Homemade Room Spray in Tamil:
பொதுவாக நமது வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூம் ஸ்ப்ரே வாங்கிவந்து அதனை வீடு ரூம் என்று அனைத்து பக்கமும் அடிப்போம். அதனை சுவாசிப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அதனால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் வீட்டினை எப்பொழுதும் வாசனையாக வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இந்த குறிப்பினை பற்றி விரிவாக காண்பதற்கு முன்னால் முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- எலுமிச்சை பழம் – 1
- இலவங்கப்பட்டை – 2
- கிராம்பு – 6
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- வாசனை திரவியம் – 4 டேபிள் ஸ்பூன்
- ரோஸ்மேரி இழை – 1 கொத்து
- தண்ணீர் – 1 கப்
- ஸ்ப்ரே பாட்டில் – 1
வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து நம்மையே தொல்லை செய்யும் ஈக்களை ஓடஓட விரட்ட சர்க்கரை போதும்
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தை செரியா துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை பழம், 1 கப் தண்ணீர், 2 இலவங்கப்பட்டை, 6 கிராம்பு, 2 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 1 கொத்து ரோஸ்மேரி இழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் வாசனை திரவியத்தை சேர்த்து நாம் எடுத்து வைத்துள்ள ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விடு முழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலமாக உங்கள் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்கும்.
வீடு எப்பொழுதும் கமகமன்னு நறுமணத்துடன் இருக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |