இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..! கழுத்து பகுதியில் இருக்கும் கருமை காணாமல் போய்விடும்..!

neck tan remove tips in tamil

Neck Tan Remove Tips

ஒரு சிலருக்கு கழுத்து பகுதியில் கருமை காணப்படும். இது அனைவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு கை கால் முட்டி கருமையாக இருக்கும். இதுபோல கருமையாக மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. உடலில் தைராய்டு, PCOD போன்ற பாதிப்புகள் இருந்தால் கூட கழுத்து, கை மற்றும் கால் முட்டிகளில் கருமை காணப்படும்.

இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த கருமையை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்..! அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரை:

எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரை

முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அந்த சாறை ஒரு காட்டன் துணியால் நனைத்து கருமை இருக்கும் இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். 5 நிமிடம் கழித்து கழுவி கொள்ளலாம்.

அதேபோல எலுமிச்சை பழத்தை இரண்டு பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் ஒரு பாதியில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கருமை இருக்கும் இடங்களில் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

இதேபோல சர்க்கரையுடன் காபி தூளும் சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். இதுபோல அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளவும். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து பகுதி மற்றும் கை கால் முட்டிகளில் இருக்கும் கருமை மறைய தொடங்கும்.

கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை ஒரே நாளில் நீக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Neck Tan Remove Tips in Tamil:

Neck Tan Removal At Home

  1. கடலைமாவு – 2 ஸ்பூன்
  2. கஸ்தூரி மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  4. தயிர் – 1 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு கடலைமாவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் கஸ்தூரி மஞ்சள்த்தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:

இந்த பேஸ்டை கருமை இருக்கும் இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து கொள்ளவும். 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ளவும்.

இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால் உங்கள் கழுத்து மற்றும் கைகால் முட்டிகளில் இருக்கும் கருமை மறைந்துவிடும். இந்த பேஸ்டை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் பயன்படுத்தலாம். இதுபோல ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே..!

கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமை நீங்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!
அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!
கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil