இரவில் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
பொதுவாக இரவு நன்றாக தூங்கினால் தான் மறு நாள் நம் வேலையை செய்ய முடியும். மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அதிலும் நன்றாக உறங்க வேண்டும். இப்போதெல்லாம் பலரும் தவிக்கும் விஷயம் தூக்கமின்மை. நாள் முழுவதும் வேலை செய்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் ரொம்ப கஷ்டப்படுவார்கள். இந்த பிரச்சனைக்கு முடிவை காண்போம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ? -சூப்பர் IDEA..!
தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்:
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, எதையாவது மனதில் நினைத்து கொண்டு அதையே பற்றி யோசிப்பார்கள் இதனால் தூக்கம் வராது. இரண்டாவது மன அழுத்தமாக இருக்கும் போது உங்களின் மூளை செயல்படும். அப்போது தூக்கம் வருவது கஷ்டமாக இருக்கும்.
நமது உடலில் பல வகையான ஹார்மோன்கள் சுரக்கின்றது. அதில் ஒன்று தான் மெலடோன் இந்த ஹார்மோன் இரவு நேரத்தில் மட்டும் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன். வாங்க தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
தண்ணீர் அதிகம் குடித்தால்:
தூங்குவதற்கு முன் தண்ணீர் அதிகமாக குடிக்க கூடாது. நீங்கள் குறைந்தது இரவு 8 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்காதீர்கள். சிறுநீர் அடிக்கடி கழித்தால் தூக்கம் கலைந்துவிடும். அதனால் இரவில் தண்ணீர் அதிகமாக குடிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.
பால் குடிப்பது:
இரவு தூங்குவதற்கு முன் பால் குடியுங்கள். வாழைப்பழம் மற்றும் நட்ஸ் வகைகள் இரவு சேர்த்து கொண்டால் தூக்கத்திற்கு வழி வகுக்கும். இரவு உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் தூங்க சென்றால் பசி உங்களை தூங்க விடாது. அதனால் இரவு உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.
மனதிற்கு பிடித்த:
உங்களுக்கு மனதிற்கு பிடித்த விஷத்தை நினைத்து கொண்டால் நிம்மதியாக தூங்கலாம். அதோடு இசை கேட்டு தூங்கினாலும் நன்றாக தூங்கலாம். முதலில் உங்களின் மனதை அமைதியாக வைத்திருந்தாலே நல்ல தூக்கம் வரும்.
Kulikkum Murai in Tamil:
ஒரு நாளைக்கு இரு முறை குளியுங்கள். இரவு தூங்குவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் முன்பு குளித்தால் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்து பாருங்கள் படுக்கை அறைக்கு வந்தவுடனே தூங்கிவிடுவீர்கள். உங்களது நண்பர்களும் இந்த பிரச்சனையில் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |