உங்களது தலை முடியை பாதுகாப்பதற்கு இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே..!

Advertisement

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா.?

தலைமுடியை வளருவதற்கும், உதிராமல் இருப்பதற்கும் பல முறைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் நீங்கள் என்ன தான் செய்தாலும் சில அடிப்படையாக செய்யும் விஷயங்களில் தவறு செய்வீர்கள். அது என்ன அடிப்படை விஷயம் என்று யோசிப்பீர்கள்.! அது என்னவென்றால் தலைக்கு எண்ணெய் தடவும் முறை தான் நண்பர்களே..! சூரிய வெப்பம், பனிப்பொழிவு, தூசு, மாசு போன்றவைகளிலுருந்து பாதுகாப்பதற்கு  எண்ணெய் சிறந்ததாக இருக்கின்றது. அதனால் தான் நம் முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தடவும் முறை மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையும் பாரம்பரியமாக வைத்திருந்தார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.? 

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை: 

எண்ணையில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தலைமுடியை நன்கு வளர செய்யும். மேலும் தலையில் இறந்த செல்களை நீக்கி முடி உதிர்விலுருந்து தடுக்கிறது.

எண்ணெய் தடவும் போது உச்ச தலையில் நன்றாக தேய்க்க வேண்டும். எண்ணெய் சாதாரணமாக தடவாமல் மசாஜ் செய்யுங்கள். நீங்கள் எப்பொழுது தலைக்கு எண்ணெய் தேய்த்தாலும் மசாஜாக செய்யுங்கள்.

தலைக்கு எண்ணெய் தடவும் போது அழுத்தி தேய்க்க கூடாது. நீங்கள் அழுத்தி தேய்த்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். இன்னொன்று தலை பின்னும் போது ரொம்ப இறுக்கமாக பிண்ணாதீர்கள்.

தலைக்கு எண்ணெய் தடவ வேண்டுமென்று அதிகமாக எண்ணெய் தடவ எண்ணெய் தடவ கூடாது. அதிகமாக எண்ணெய் தடவினால் முடியின் பின்னலில் எண்ணெய் இறங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் தலை எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும்.

தலையில் எண்ணெய் தடவுவதை நிறுத்தி விடாதீர்கள். தலையில் எண்ணெய் இல்லை என்றால் மாசு, தூசு போன்றவை தலையில் தங்கிவிடும்.

முக்கியமானது என்னவென்றால் உங்களது தலை முடியை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களது தலை முடி வறண்டதாக இருந்தால் வாரத்தில் மூன்று முறை எண்ணெய் மசாஜ் செய்யுங்கள். அதுவே எண்ணெய் பிசுபிசுப்புடையதாக இருந்தால் வாரத்தில் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்.

நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தீர்கள் என்றால் 2 மணி நேரம் தலையில் எண்ணெய் இருக்க வேண்டும். அப்போது தான் முடியின் வேர் பகுதி வரைக்கும் எண்ணெய் பரவும்.

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement