Onion Cutting Tips in Tamil
பொதுவாக அனைவருக்குமே சமைப்பதில் கூட அதிக கஷ்டம் இருக்காது, ஆனால் சமைப்பதற்கு தேவைப்படும் காய்கறிகளை நறுக்குவதில் தான் அதிக கஷ்டம் இருக்கும். அதிலும் வெங்காயத்தை பற்றி சொல்லவே வேண்டாம் வெங்காயம் உரிப்பதற்கு அதிக சிற்பமாக இருக்கும். இருந்தாலும் சமைப்பதற்கு பெருபாலும் தேவைப்படும் உணவு பொருட்களில் வெங்காயமும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் வெங்காயம் உரிப்பதற்கும், வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். இந்த வெங்காயத்தை உரிப்பதற்கும், வெட்டுவதற்கு ஒரு அருமையான டிப்ஸ் இருக்குறது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்த்து விடுவோம்.
வெங்காயம் உரிக்க டிப்ஸ்:
சின்ன வெங்காயம்:
பொதுவாக் சின்ன வெங்காயத்தின் தோலை உரிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருந்தாலும் இதற்கு ஒரு அருமையான ட்ரிக்ஸ் இருக்கிறது அது என்ன அப்படின்னா.. சின்ன வெங்காயத்தை உரிப்பதற்கு முன் சிறுது நேரம் தண்ணீரில் ஊறவைத்து உரித்தீர்கள் என்றால் மிக எளிதாக உரித்துவிடலாம். அதிக நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
பெரிய வெங்காயம்:
பெரிய வெங்காயத்தை தோல் உரிப்பது என்பது மிகவும் எளிமையான விஷயம் மேல் படித்தால் காட்டியுள்ளது போல் பெரிய வெங்காயத்தை சரி பாதியாக வெட்டி கொள்ளுங்கள். பிறகு வெங்காயத்தின் வேர் மற்றும் நுனி பகுதியை கட் செய்துவிட்டு தோல் உரித்தாள் மிக எளிதாக தோல் உரித்துவிடலாம்.
வெங்காயம் உரித்தாலே பொதுவாக பலருக்கு கண்களில் இருந்து தண்ணீர் வரும் அவற்றை தவிர்க்க வெங்காயத்தை உரித்த பின் சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வையுங்கள் இப்படி செய்தால் 80 சதவீதம் அந்த பிரச்சனையை தவிர்க்க முடியும். வெங்காயம் அறியும்போது கண்களில் தண்ணீர் வருவது மிகவும் நல்லது தான் இதனால் கண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. கண்களில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க இத பண்ணாலே போதும்!
பெரிய வெங்காயம் பொடிதாக வெட்டுவது எப்படி?
Onion Cutting Tips in Tamil – முதலில் கூறப்பட்டுள்ள முறைப்படி பெரிய வெங்காயத்தை கட் செய்து தோலை அகற்றிக்கொள்ளுங்கள். பிறகு பிரியாணிக்கு நீளமாக கட் செய்வோமே அது போன்று வெங்காயத்தை வெட்டவும், பிறகு மேல் படத்தில் கட்டியுள்ளது போல் வெங்காயத்தின் நடு பகுதியை கட் செய்து கொள்ளுங்கள். பிறகு மேல் கட்டியுள்ள படத்தில் மூன்றாவதாக உள்ளதல்லவா அந்த படத்தில் காட்டியுள்ளது போல் பொடிதாக கட் செய்ய வேண்டும். இவ்வாறு கட் செய்தீர்கள் என்றால் நன்கு பொடிதாக வெங்காயம் கட் செய்துவிடலாம். இந்த விஷயம் சிலருக்கு தெரிந்திருக்கலாம், கண்டிப்பாக சமையல் அறைக்கே செல்லாமல் புதிதாக சமைக்க செல்லும் நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர்களுக்கானது இந்த பதிவு. பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன் நன்றி வணக்கம்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |