இந்த Trick மட்டும் தெரிந்தால் வெங்காய தோலை தூக்கி போட மாட்டீர்கள்..!

Advertisement

வெங்காய தோலின் பயன்கள்

பொதுவாக வெங்காய தோலை உரித்து விட்டு தான் சமையலுக்கு பயன்படுத்துவோம். அந்த உரித்த தோலை குப்பையில் தான் போடுவோம். ஆனால் தூக்கி போடும் வெங்காய தோலில் பயன் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..! ஆமாம் நண்பர்களே..! வெங்காய தோலில் பயன் இருக்கிறது. அது என்னென்ன பயன்கள் என்று இந்த பதிவை முழுதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வெங்காயம் வெட்டுறதுல இப்படி ஒரு Trick இருக்கா? இதனை நாள் தெரியாம போச்சே..!

சுவையான உணவு:

நீங்கள் எந்த உணவு அரிசியில் செய்தாலும் அதில் சிறிது வெங்காய தோலை சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக பிரியாணி, தாக்களி சாதம், வெஜிடபிள் சாதம் போன்றவற்றில் சேர்க்கலாம். இதில் சேர்க்கும் போது உணவின் ருசியை அதிகரிக்கும்.

நீங்கள் வீட்டில் ரொட்டி சுடுகிறீர்கள் என்றால் அதில் வெங்காய தோலை அரைத்து அந்த ரொட்டியில் சேர்க்கவும். இப்படி செய்வதினால் சுவையை அதிகரிப்பதோடு சாப்பிடுவதற்கு வாசனையாக இருக்கும்.

வெங்காய தோலை நன்றாக கருமை நிறம் வரும் வரை வதக்கவும். நீங்கள் வீட்டில் எந்த கிரேவி செய்தாலும் இந்த வெங்காய தோல் வருத்தத்தை லேசாக கிரேவி மேல் தூவி விடவும்.

வெங்காய தோலை சூப் மற்றும் கிரேவி எது செய்தாலும் நன்றாக கொதிக்கும் பொழுது வெங்காய தோலை சேருங்கள். வெங்காய தோல் சேர்த்து கொதித்தவுடன் வெங்காய தோலை எடுத்து விடுங்கள். இப்படி சேர்ப்பதால் நீங்கள் செய்யும் சூப் மற்றும் கிரேவி கெட்டியாக பதத்திற்கு மாற்ற உதவுகிறது. அதோடு கிரேவியின் நிறத்தை மாற்றும்.

அலர்ஜி அரிப்பு நீங்க:

வெங்காய தோலை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு தோலை நீக்கி விட்டு தண்ணீரை மட்டும் குடியுங்கள். இப்படி குடிப்பதால் அழற்சியிலுருந்து எதிர்த்து போராட உதவுகிறது.

மனதை அமைதிப்படுத்தும் மருந்து: 

இஞ்சி டீ, ஏலக்காய் டீ, புதினா டீ, கிரீன் டீ, மல்லி டீ, மசாலா டீ போன்று வெங்காய தோல் டீயும் உள்ளது. இந்த குடிப்பதால் மனதை அமைதிப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.

வெங்காய தோலில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மற்றும் வைட்டமின் சி, ஈ போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

இதுவரைக்கும் வெங்காய தோலில் இருக்கும் பயன்கள் தெரியாமல் தூக்கி போட்டிருப்பீர்கள். இந்த பதிவை படித்த பிறகு தெரிந்திருக்கும் வெங்காய தோலின் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் நண்பர்களே.! இதோடு இந்த பதிவை நிறைவு செய்கின்றேன். மற்றொரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே..! நன்றி வணக்கம்.🙏

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement