வெங்காயம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..! Onion Storage Tips in Tamil
Onion Storage Tips in Tamil – பொதுவாக சமைப்பதற்கு முக்கால் வாசி பயன்படும் காய்கறிகளில் ஒன்று தான் வெங்காயம். இதன் காரணமாகவே வெங்காயத்தை பலர் நிறைய அளவு வாங்கி வீட்டில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்வார்கள். வெங்காயம் பொதுவாக தாளிப்பதற்கு, சட்னி அரைப்பதற்கு, குழம்பு வைப்பதற்கு, பக்கோடா செய்வதற்கு, அன்று சைவ அசைவ உணவுகள் செய்வதற்கு அவசியம் தேவைப்படும் ஒன்றாகும். இத்தகைய வெங்காயம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
டிப்ஸ்: 1
வெங்காயம் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் சூரிய ஒளியில் இருந்து வெங்காயத்தை மறைத்து வைக்க வேண்டும், அதாவது 12 முதல் 17 டிகிரி F வரை சுத்தமான, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் விக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் வெங்காயம் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!
டிப்ஸ்: 2
வெங்காயத்தை சேமித்து வைக்க பிளாஸ்டிக் கவரை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் கவரி வைத்தால் வெங்காயத்திற்கு காற்றோட்டம் கிடைக்காமல் போய்விடும் ஆக அது சீக்கிரம் கெட்டுபோய்விடும். ஆக வேண்டியதை காற்றோட்டத்துடன் வைத்துப்பது தான் மிகவும் சிறந்தது.
டிப்ஸ்: 3
வெங்காயத்தை எக்காரணம் கொண்டும் பிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனென்றால் வெங்காயத்திற்கு குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாது. ஒருவேளை அதனை வைத்தீர்கள் என்றால் வெங்காயம் அழுகி போகும் அல்லது பூஞ்சை உருவாகும் ஆனால் ஃப்ரீஸரில் வைக்கலாம். அதாவது வெங்காயத்தை உரித்தோ அல்லது நறுக்கியோ ஒருகாற்றுப்புகாத பையில் வைத்து, பிறகு அதனை ஒரு டப்பாவிற்குள் வைத்து ஃப்ரீஸரில் வைக்கலாம். இவ்வாறு செய்தால் பச்சை வெங்காயம் 8 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதுபோல தேங்காய் இருந்தால் வாங்கவே வாங்காதீர்கள்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |