கருப்பட்டியில் ஒர்ஜினல் எது.? போலி எது.? என்று கண்டுபிடிக்க டிப்ஸ்

Advertisement

கருப்பட்டியில் ஒர்ஜினல் எது.? போலி எது.? கண்டுபிடிப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.? இன்றைய பதிவில் கிராம புறத்தில் அதிகம் பயன்படுத்த கூடிய கருப்பட்டியை ஒர்ஜினல் மற்றும் போலியானதை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்வோம். கருப்பட்டியில் இருக்கும் இரும்பு சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சுகர் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பட்டியை நீங்கள் குடிக்கும் டீ அல்லது காப்பியில் போட்டு குடிக்கலாம். இப்படி குடிக்கும் போது சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருக்கும். கருப்பட்டி சாப்பிடுவதால் உடலை சுறுசுறுப்பாக வைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளையும் போக்க கூடியது. இப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட கருப்பட்டியை  ஒர்ஜினல் கருப்பட்டி என்று எப்படி கண்டுபிடிப்பது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ நீங்கள் பயன்படுத்துவது கடுகு தானா என்று எப்படி தெரிந்துகொள்வது.?

கருப்பட்டியில் ஒர்ஜினல் மற்றும் போலி கண்டுபிடிப்பது எப்படி.?

1 கிளாஸ் தண்ணீரில் சிறு துண்டு கருப்பட்டி துண்டை போட வேண்டும். ஒர்ஜினல் கருப்பட்டி என்றால் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் கருப்பட்டி கரைய,அதுவே போலியான கருப்பட்டி 1/2 மணி நேரத்தில் கரைந்துவிடும்.

கருப்பட்டியை உடைத்து பார்த்தால் கருப்பும் மற்றும் பழுப்புக் கலந்த நிறத்தில் இருந்தால் ஒர்ஜினல் கருப்பட்டி, போலியான கருப்பட்டி உட்பகுதியில் பளபளப்பாக இருக்கும்.

ஒர்ஜினல் கருப்பட்டி வீட்டில் நீண்ட நாட்கள் இருந்தாலும் அழுத்தமாக இருக்கும். ஆனால் போலியான கருப்பட்டி சில நாட்களிலே அழுத்தமான தன்மையிலுருந்து இளகிவிடும்.

ஒர்ஜினல் கருப்பட்டி வீட்டில் நீண்ட நாட்கள் இருந்தால் கருப்பட்டியின் மேல் பகுதியில் புள்ளி புள்ளியாக இருக்கும். போலி கருப்பட்டியில் புள்ளிகள் வராது.

ஒர்ஜினல் கருப்பட்டி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். போலி கருப்பட்டி பளப்பாகவும் கையில் ஒட்டக்கூடியதாகவும் இருக்கும்.

உணவில் ஒர்ஜினல் கருப்பட்டியை சேர்த்தால் வாசனை மற்றும் சுவையாக இருக்கும். ஆனால் போலி கருப்பட்டி வாசனை இல்லாமல் இனிப்பு சுவையை மட்டும் காணப்படும். இவற்றை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips  In Tamil
Advertisement