ஒட்டடை வராமல் இருக்க வினிகர் மற்றும் பழைய துணி மட்டும் போதும்

ottadai varamal irukka

ஒட்டடை வராமல் தடுக்க

வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் ஒட்டடை மட்டும் வந்து கொண்டே தான் இருக்கும். வீட்டில் வாரம் வாரம் சுத்தம் செய்தாலும் ஒட்டடை வந்து கொண்டே இருக்கும். ஒட்டடையோடு எட்டு கால் பூச்சியும் அதில் இருக்கும். இதனை பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். நீங்கள் அடிக்கடி ஒட்டடை அடித்து tired ஆகாமல் ஈசியான முறையில் ஓட்டடை வராமல் செய்ய எந்த செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஒட்டடை வராமல் இருக்க என்ன செய்வது:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

குறிப்பு:1

ஒட்டடை வராமல் தடுக்க

ஒட்டடை குச்சியில் முனையில் ஒரு பழைய துணியை கட்டி கொள்ளவும். அந்த துணியில் வெள்ளை வினிகரை துணி முழுவதும் தெளித்து கொள்ளவும். இந்த ஒட்டடை குச்சியை வைத்து சுவர் மேலே மற்றும் துடைத்து விடவும். வினிகர் வாசத்திற்கு எட்டுக்கால் பூச்சி வராது, எட்டுக்கால் பூச்சி வரவில்லை என்றால் ஒட்டடை பிரச்சனையும் இருக்காது.  இப்படி செய்வதினால் 3 மாதங்கள் அதற்கும் மேலாகவும் ஒட்டடை வராது. 

வாரத்தில் ஒரு நாள் இந்த மாதிரி செய்தால் வீடு புதிதாகவே இருக்கும்

குறிப்பு:2

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் வினிகர்  சிறிதளவு, அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை கட்டி இல்லாமல் கலந்து கொண்டு வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டார் செய்து வைக்கவும். ஸ்ப்ரே பாட்டில் தண்ணீரை பயன்படுத்தி வீட்டின் சுவர் மற்றும் எங்கெல்லாம் ஒட்டடை வருகின்றதோ அந்த இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்யவும். இந்த வாசனைக்கு பூச்சிகள் வராமல் இருக்கும். அதே போல ஒட்டடை இல்லாமல் வீடு அழகாக காட்சியளிக்கும். 

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்க.! இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். நன்றி வணக்கம்.!

ஒட்டடை அடிப்பதில் இப்படி ஒரு Tricks இருக்கா தெரியாம போச்சே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil