ஒரு வாரம் ஆனாலும் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Pachchai Milagai Alugamal Iruka Tips 

பொதுவாக சமையல் செய்ய வேண்டும் என்றால் வெறும் மளிகை பொருட்கள் மட்டும் இருந்தால் போதாது. ஏனென்றால் மளிகை பொருட்களை வைத்து குழம்பு மற்றும் ரசம் வைத்தாலும் கூட அதற்கு தொட்டு சாப்பிட காய்கறிகள் தான் முதலில் வேண்டும். அதனால் தினமும் காய்கறிகளை வாங்கவில்லை என்றாலும் கூட வாரம் 1 முறையாவது காய்கறிகளை வாங்கி தான் ஆக வேண்டும். இவ்வாறு நாம் வாங்கும் காய்கறிகளில் கண்டிப்பாக பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயம் என இவற்றை எல்லாம் வாங்கியே தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த மூன்று பொருட்களும் அனைத்து சாப்பாட்டிற்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் பார்த்து பார்த்து வாங்கி வரும் பச்சை மிளகாய் ஆனது வாங்கி வந்த ஓரிரு இரிரு நாட்களிலேயே அழுகும் நிலைக்கு வந்து விடும். அதனால் இன்றைய பதிவில் பச்சை மிளகாய் வாடாமல் இருப்பதற்கான டிப்ஸ் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க என்ன செய்வது:

டிப்ஸ்- 1

பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க

நீங்கள் வீட்டிற்கு பச்சை மிளகாய் வாஙகி வந்தவுடன் அதில் இருக்கும் காம்பினை நீக்கி விடுங்கள். அதன் பிறகு காம்பு நீக்கிய பச்சை மிளகாயினை ஒரு கவரில் போட்டு அப்ப்டியே வைத்தால் போதும். இத்தகைய முறையினை செய்வதன் மூலம் 1 வாரம் ஆனாலும் கூட பச்சை மிளகாய் ஆனது வீணாகாமல் அப்படியே இருக்கும்.

அரிசி முதல் கோதுமை மாவு வரை பூச்சிகள் வராமலும், நீண்ட நாட்களுக்கு உழைத்து வரவும் இப்படி பண்ணுங்க..

டிப்ஸ்- 2

அதேபோல் முதலில் பச்சை மிளகாயில் இருக்கும் காம்பினை நீக்கி விட வேண்டும். அதன் பிறகு பச்சை மிளகாயினை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு பிரித்து கொள்ளுங்கள். அதாவது ஏதேனும் ஒரு பச்சை மிளகாய் அதில் பழுத்து இருந்தாலும் கூட அதில் இருக்கும் காம்பினை நீக்கி விடுங்கள்.

மேலும் காம்பு நீக்கிய பச்சை மிளகையினை டப்பாக்கள் வைக்கலாம் காற்று ஓட்டமாக இருக்குமாறு அப்படியே வைத்து விடுங்கள். இவ்வாறு செய்தாலும் பச்சை மிளகாய் 5 நாட்கள் வரை வீணாகாது.

டிப்ஸ்- 3

how to store green chillies for weeks in tamil

வாங்கி வந்த பச்சை மிளகாயில் இருக்கும் காம்பினை முதலில் நீக்கி விடுங்கள். பின்பு ஒரு பிளாஸ்டிக் டப்பாவினை எடுத்துக்கொண்டு அதில் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து அதன் மேலே பச்சை மிளகாயினை வைத்து விடுங்கள். கடைசியாக பச்சை மிளகாய் மீது மற்றொரு நியூஸ் பேப்பரையும் போட்டு மூடிவைத்து விடுங்கள். இந்த டிப்ஸ் முறையிலும் பச்சை மிளகாய் அழுகாமல் பார்த்துகொள்ளலாம்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா ஆச்சரியமாக இருக்கே ..

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement