பல் வலி பிரச்சனைகள் இரண்டே நிமிடத்தில் குணமாக இதை செய்து பாருங்கள்.!

Advertisement

பல் வலி | Teeth Pain in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் பற்களில் ஏற்படும் வலிகள், ஈரல் வலி, வீக்கம் மற்றும் பற்களில் இரத்த கசிவுகள் போன்றவற்றின் வலிகளை உடனடியாக குணமாக்குவதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்ததே சரி செய்யலாம். பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் பல்வலி பிரச்சனையும் ஒன்று. பல்லில் வலிகள் ஏற்படும் பொழுது முகத்தில் வீக்கம், தூக்கமின்மை போன்ற பலவிதமான வலிகளும் ஏற்படும். இவற்றை சரி செய்வதற்க்கான சில டிப்ஸ்களை நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.

பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்

பல் வலி பிரச்சனைகள் ஏற்பட காரணம்:

பற்களில் கிருமிகள் தாக்கம் அதிகமாக இருந்தாலும், சொத்தை பற்கள் அதிகமாக இருந்தாலும் அல்லது பற்களை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும் பற்களில் வலிகள் அதிகமாக ஏற்படுகின்றது.

பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறைகளாவது சுத்தம் செய்வது நல்லது. இரவு உறங்குவதற்கு முன்பு பற்களை சுத்தம் செய்து விட்டு உறங்குவது நல்லது. இப்படி செய்வதால் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்காது.

பற்களில் பல் பொடிகளை பயன்படுத்துவதால் வலிகள் ஏற்படாது, அதே போல் வேப்பம் குச்சிகளை கொண்டு பற்களை சுத்தம் செய்வது நல்லது இதன் மூலம் பற்களில் கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

Pal Vali Neenga Tips in Tamil:

பல்வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு நம் வீட்டில் கிடைக்க கூடிய சின்ன வெங்காயத்தை எடுத்து கொண்டு, அதனை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொண்டு பற்களில் வலி இருக்கும் இடத்தில் அந்த வெங்காயத்தை வைத்து கடித்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பல் வலி, இரத்த கசிவு, ஈரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இரண்டு நிமிடத்திலேயே குணமாகிவிடும்.

அடுத்ததாக அதே சின்ன வெங்காயத்தை ஒரு காட்டன் துணியில் கட்டி அதனை நசுக்கி அதில் வரும் சாறுகளை ஒரு கிண்ணத்தில் பிழிந்து அதனை பல் வலி இருக்கும் இடத்தில் அந்த சாறை வைப்பதன் மூலம் பல் வலி குணமாகிவிடும். அதுமட்டுமின்றி பற்களின் வேர்களை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.

நம் வீட்டில் கிடைக்க கூடிய பத்து மிளகுகளை எடுத்து கொண்டு அதை நன்றக இடித்து கொண்டு அதன் பிறகு அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பல் வலி, பல் சொத்தை இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் பல் வலி குணமாகிவிடும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement