பல்லி தொல்லை நீங்க
வீடு என்று இருந்தாலே அதில் பூச்சிகள், எறும்புகள் இருப்பது இயல்பானது. அதிலும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு உணவில் பல்லி விழுந்து அதை தெரியாமல் சாப்பிட்டு விட்டால் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் கிரைண்டரில் மாவு அரைக்கும் போது கண் அசைக்கும் நேரத்தில் பல்லி விழுந்து அது தெரியாமல் நாமும் மாவை அரைத்து தோசையாகவோ அல்லது இட்டலியாகவோ ஊற்றி சாப்பிடுவோம். சிறிது நேரம் கழித்து நமது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பல்லி தொல்லையை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
பல்லிகள் வராமல் இருக்க:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மிளகுத்தூள்:
வீட்டில் பல்லிகள் வரும் இடத்தில் சிறிதளவு மிளகுத்தூளை வைக்க வேண்டும். மிளகுத்தூளில் உள்ள வாசனை பல்லிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இல்லையென்றால் மிளகாய் தூளை ஒரு பாட்டிலில் ஊற்றி பல்லியின் மேலே தெளிக்கவும், இதன் மூலம் பல்லிகளின் கண்களில் எரிச்சலை ஏற்ப்டுத்தி அடுத்த முறை பல்லிகள் வராமல் இருப்பதற்க்கு உதவி செய்கின்றன.
எந்தெந்த கிழமையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்..!
வெங்காயம் மற்றும் பூண்டு:
வீட்டில் மூளையில் வெங்காயம் மற்றும் பூண்டின் தோல்களை நீக்கி பற்களை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லிகள் வராது.இல்லையென்றால் ஒரு பாட்டிலில் வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் பல்லிகள் வராது.அந்துருண்டை:
அந்துருண்டை வாசனைக்கு பல்லிகள் வராது. அதனால் வீட்டில் உள்ள செல்ப் மற்றும் அலமாரி, சமையலறை போன்ற இடத்தில் ஒன்று வைத்தாலே போதும், பல்லிகள் வராது.
முக்கியமாக வீட்டில் பல்லிகள் வராமல் இருப்பதற்கு வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும். கதவு மற்றும் ஜன்னலை மூட வேண்டும்.
பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |