வீட்டில் ஒரே பல்லி தொல்லையா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது..!

Advertisement

Palli Thollai Neenga Tips

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள டிப்ஸ்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். அது என்ன டிப்ஸ் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அதாவது ஒரு சிலரின் வீட்டில் பல்லிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சமைத்து வாய்க்கும் உணவுகளில் அது எச்சம் செய்வது அல்லது அதனுள்ளே விழுந்துவிடுவது போன்றவற்றால் நமக்கு ஃபுட் பாய்சன் ஆகி அதனால் நமது உடல் நலம் மிகவும் பாதிப்படைவது போன்றவை ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் அட்டகாசம் செய்யும் பல்லிகளை விரட்டி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Homemade Lizard Killer in Tamil:

Homemade Lizard Killer in Tamil

வீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. டெட்டால் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. வெங்காயம் – 1
  3. பூண்டு – 8 பற்கள் 
  4. எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. Cotton Balls – தேவைக்கேற்ப
  6. தண்ணீர் – 1 கப் 

வீட்டில் தொல்லை செய்யும் எலியை நிரந்தமாக விரட்ட அரிசி மாவு மட்டும் போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் டெட்டாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்:

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 1 வெங்காயம் மற்றும் 8 பற்கள் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் வடிக்கட்டி நாம் முன்னேரே டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள்.

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா அப்போ இதை செய்யுங்க போதும்

எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:

இறுதியாக அதுனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் நாம் எடுத்து வைத்துள்ள Cotton Balls-களை நினைத்து உங்கள் வீட்டில் எங்கெல்லாம் பல்லி அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் வைத்து கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக பல்லி தொல்லை நீங்குவதை நீங்களே காணலாம்.

உங்க வீட்டில் கொசுக்களை விரட்ட ஒரு பைசா கூட செலவில்லாமல் வீட்டிலேயே கொசு விரட்டி லிக்விட் தயாரிப்பது எப்படி தெரியுமா

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement