Palli Varamal Thaduppathu Eppadi
மனிதனாக பிறந்த அனைவருக்கும் வீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் வசிப்பதற்கு நிலையான ஒரு இடம் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் பார்த்து பார்த்து கட்டும் வீட்டில் நாம் இருக்கின்ற நேரத்தை விட பல்லி இருக்கும் நேரம் தான் அதிகமாக உள்ளது. அதாவது காலை மற்றும் மாலை என எப்போது பார்த்தாலும் வீட்டில் பள்ளிகளின் தொல்லை என்பது இருந்து கொண்டு தான். இத்தகைய பல்லியினை நாம் எளிதாக விரட்ட முடியவில்லை என்பதால் அப்படியே விட்டு விடுகிறோம். ஆனால் இனி நீங்கள் இதுமாதிரி விட வேண்டாம். ஏனென்றால் இன்றைய டிப்ஸ் பதிவின் மூலம் உங்களுக்கு பயனளிக்கும் விதமாக வீட்டின் சுவற்றில் உள்ள பல்லிகளை எவ்வாறு விரட்டுவது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டில் பல்லியை விரட்டுவது எப்படி.?
குறிப்பு: 1
- காபி தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்து வைத்துள்ள 1 ஸ்பூன் காபி தூள் மற்றும் மிளகாய் தூளினை சேர்க்கவும். பின்பு இதில் 3 சொட்டு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த பேஸ்டை வீட்டில் பல்லி இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்தால் போதும் உங்களுடைய வீட்டில் பல்லி என்று ஒன்று உள்ளதை கண்ணால் கூட பார்க்க முடியாது.
குறிப்பு: 2
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- வினிகர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
பொதுவாக எலுமிச்சை ஆனது உணவு தயாரிக்க மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டும் இல்லாமல் பூச்சிகளை விரட்டவும் பயன்படுகிறது.
இப்போது ஒரு ஸ்பிரே 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை அதில் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பல்லி வரும் மூலையில் ஸ்பிரே செய்தால் போதும் பல்லி வரவே வராது.
காரில் எலி தொல்லை இல்லாமல் இருக்க மிளகை இப்படி பயன்படுத்துங்க |
குறிப்பு- 3
வீட்டு சுவற்றில் காணப்படும் பல்லியினை குளிர் காலத்தில் அதிகமாக பார்க்க முடியாது. ஏனென்றால் பல்லிகளுக்கு குளிர் என்பது ஆகாது. மேலும் இவை பெரும்பாலும் வெப்ப காலநிலையினை தான் ஒத்திருக்கிறது.
அதனால் எந்த இடத்தில் அதிகமாக பல்லி வருகிறதோ அங்கே எல்லாம் நன்றாக குளிர்ந்த நீரை தெளித்து விடுவதன் பல்லி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு- 4
வீடுகளில் காணப்படும் பல்லிகளுக்கு வெங்காயம் மற்றும் பூண்டு வாசனை என்பது ஆகாத ஒன்றாக உள்ளது. அதனால் வெங்காயம் மற்றும் பூண்டினை சேர்த்து முதலில் பேஸ்ட் போல் அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும்.
பின்பு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சாற்றினையும் சேர்த்து கலந்து பல்லி வரும் இடத்தில் தெளித்தால் போது ஒரு பல்லி கூட வீட்டை எட்டி பார்க்காது.
ஒரே கொசு தொல்லையா இருக்கா.. அப்படினா கொசு தொல்லையில இருந்து தப்பிக்க இதை தெரிஞ்சுக்கோங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |