கொங்கு நாட்டு ஸ்பெஷல், பள்ளிபாளையம் சிக்கன் இனி உங்க வீட்டிலும் Easy -யா செய்யலாம்.

Advertisement

பள்ளிபாளையம் சிக்கன் பொரியல் 

நாம் தினமும் சாப்பிடும் சாப்பிட்டினை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் என்று இரண்டே வகைகள் தான் உள்ளது. இந்த இரண்டடில் நாம் பெரும்பாலும் விரும்புவது அசைவ சாப்பாட்டினை தான். அதிலும் குறிப்பாக சிக்கனில் என்ன ரெசிபி செய்து வைத்தாலும் கொஞ்சம் கூட மறுக்காமல் சாப்பிட்டு விடுவோம். இப்படி இருக்கும்பட்சத்தில் சிலருக்கு கொங்கு ஸ்பெஷல் எதுவாக இருந்தாலும் அதிகமாக பிடிக்கும். ஆனால் அத்தகைய ரெசிபியை வீட்டில் செய்தால் அதே மாதிரியான சுவையில் இல்லை என்று கூறுவார்கள். அதனால் இன்று கொஞ்சம் கூட சுவை மாறாமல் கொங்கு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் பொரியல் செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பள்ளிபாளையம் சிக்கன் பொரியல் செய்முறை விளக்கம்: 

தேவையான பொருட்கள்:

கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 300 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 15
மஞ்சள் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு

பள்ளிபாளையம் சிக்கன் பொரியல் செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி விழுதை சேர்த்து நன்றாக கிளறிவைத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெயை சூடாக்கி, அதில் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்தது காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது மீதம் உள்ள வெங்காயம் இஞ்சி மற்றும் பூண்டு விழுதை சேர்த்து பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.

அடுத்ததாக சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

சிக்கன் 10 நிமிடங்களை வறுத்த பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காய் சேர்த்து சிக்கனை 30 முதல் 40 வரை நன்றாக வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். பின்னர் சிக்கன் மீது நல்ல எண்ணெய் ஊற்றி இறக்கினால் கொங்கு நாட்டு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன் பொரியல் ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement