வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க இதை செய்துடுங்கள்.!

pambu varamal iruka enna seiya vendum

பாம்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

பொதுவாக வீட்டில் விஷ பூச்சிகளான தேள், பூரான், கம்பளி பூச்சி போன்ற பூச்சிகள் வருவது வழக்கம். ஆனால் இந்த பூச்சிகள் வந்தால் அடித்து விடுவோம். ஆனால் வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்வது என்றே தெரியாது. அதை அடிக்கவும் முடியாது. அதேபோல் பாம்பு வந்ததிற்கு பிறகு என்ன செய்வது என்பதை விட அதை வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாங்க வீட்டிற்குள் பாம்பு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

பூண்டு மற்றும் வெங்காயம்:

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயத்தில் சல்பேட் உள்ளது.  அதனால் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்ட்டுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வீட்டை சுற்றி தெளித்து விடுங்கள்.  உங்களால் அரைக்க முடியவில்லை என்றால் பூண்டு உரித்த தோல், வெங்காய தோல் போன்றவற்றை வீட்டை சுற்றி போடுங்கள். இந்த வாசத்திற்கு பாம்புகள் வராது. 

கிராம்பு எண்ணெய் பயன்கள்:

கிராம்பு எண்ணெய் பயன்கள்

கடைகளில் விற்கப்படும் கிராம்பு எண்ணெயை வாங்கி வந்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து ஜன்னல் மற்றும் வீட்டை சுற்றி தெளியுங்கள். பாம்புகள் வராது.

எலுமிச்சை புல் பயன்கள்:

எலுமிச்சை புல் பயன்கள்

எலும்பிச்சை புல்லை வாசல் மற்றும் பின் புறத்தில் நட்டு வையுங்கள். இந்த புல்லிற்கு தவளை, கரப்பான் பூச்சி, பாம்பு போன்றவை வீட்டிற்குள் வராது.

பாம்பு கற்றாழை செடி: 

பாம்பு கற்றாழை செடி

பாம்பு கற்றாழை செடி பாம்பை விரட்டுவதற்கு சிறந்த செடியாக கருதப்படுகிறது. அதனால் வீட்டை சுற்றிலும் இந்த செடியை நட்டு வைத்தீர்கள் என்றால் பாம்பு வீட்டிற்குள் வராது.

செடிகளை சுத்தம் செய்ய வேண்டும்:

செடிகளை சுத்தம் செய்ய வேண்டும்

வீட்டில் உள்ள தேவையில்லாத செடிகளை அகற்ற வேண்டும். அதோடு நீங்கள் தோட்டம் வைத்திருந்தால் அதை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் வீட்டை சுற்றிலும் செடியாக பாம்புகள் வருவதற்கு நீங்களே வழி வகுக்கின்றன.

வீட்டில் ஓட்டைகள் இருந்தால் அடைக்கவும்: 

வீட்டிற்குள் ஏதும் ஓட்டைகள் இருந்தால் அடைத்து வையுங்கள். ஏனென்றால் அது வழியாக பாம்பு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil