Pasi Paruppu Laddu Recipes in Tamil
அனைவருடைய வீட்டிலும் பெரும்பாலும் தீபாவளிக்கு ரவை உருண்டை, பயிறு உருண்டை மற்றும் கெட்டி உருண்டை என இவ்வாறு உருண்டை ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் லட்டு ரெசிபியை அவ்வளவாக செய்ய மாட்டார்கள். ஏனென்றால் லட்டு செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதேபோல் அனைவருக்கும் லட்டு செய்ய தெரிவது இல்லை. இவை இரண்டுமே இதற்கான காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த தீபாவளிக்கு சுவையான மற்றும் எளிமையான லட்டு செய்யலாம். அதாவது பாசிப்பருப்பு லட்டு.
பொதுவாக ஸ்வீட் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஸ்வீட்டினை பெரும்பாலும் மகிழ்ச்சியான நேரங்களில் கடையில் வாங்குவார்கள் அல்லது வீட்டில் செய்வார்கள். அந்த ஸ்வீட் வகையில் இடம்பெற்ற ஓன்று தான் லட்டு. பெரும்பாலானவர்களுக்கு லட்டு மிகவும் பிடித்தமான ஸ்வீட் ஆகும். ஆக உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு லட்டு மிகவும் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு பாசிப்பருப்பு லட்டு செய்து பாருங்கள். சரி வாருங்கள் சுவையான பாசிப்பருப்பு லட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி..?
| பொருட்களின் அளவு | செய்முறை விளக்கம் |
| பாசிப்பருப்பு- 1 கப் | முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்து விட வேண்டும். |
| மிக்சி ஜாரில் பொருளை சேர்த்தல் | இப்போது வறுத்த பாசிப்பருப்பை நன்றாக பவுடர் போல நைசாக அரைத்து சல்லடையில் சளித்து தனியாக வைக்க வேண்டும். |
| சர்க்கரை- 1 கப் | பின்பு 1 கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். |
| ஏலக்காய்- 3 | அடுத்து அரைத்து வைத்துள்ள சர்க்கரையுடன் 3 ஏலக்காயை சேர்க்கவும். |
| நெய் மற்றும் முந்திரி | கடைசியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை நன்றாக பொன் நிறமாக வறுத்து கொள்ளுங்கள். |
| லட்டு மாவு தயார் | இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரைத்த சர்க்கரை, பாசிப்பருப்பு மாவு, வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் என அனைத்தினையும் சேர்த்து 5 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக பிசைந்தால் லட்டு மாவு தயார். |
| பாசிப்பருப்பு லட்டு ரெடி | நீங்கள் பிசைந்து வைத்துள்ள லட்டு மாவில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து உருண்டை போல பிடித்து வைக்க வேண்டியது தான். அவ்வளவு தான் பாசிப்பருப்பு லட்டு தயார். |
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |















