Patha Vedippu Treatment in Tamil
முக அழகை மேம்படுத்துவதில் மட்டும் தான் அக்கறை செலுத்துகின்றோம். பெரும்பாலானவர்களுக்கு குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. குதிகால் வெடிப்பு அதிகமாகி, அதிலிருந்து வலி வந்த பிறகு தான் அதனை எப்படி சரி செய்வது என்றே யோசிக்கிறார்கள். குதிகால் ஏற்படுத்துவதற்கு உடல் பருமன், நீண்ட நேரம் நிற்பது, வறண்ட சருமம், சரியாக பராமரிக்காமல் இருப்பது, போன்ற காரணங்களினால் குதிகால் வெடிப்பு ஏற்படுகின்றது. இதனை வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் படியுங்கள்⇒ கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை நிமிடத்தில் மறைய வைக்கும் சில டிப்ஸ்..!
Foot Crack Treatment Home in Tamil
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பழம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. இவை பாதங்களை ஈரப்பதமாக்கி தோல் வறட்சியை தடுக்கிறது.2 வாழைப்பழங்களை பேஸ்ட்டாக மசித்து கொள்ளவும். இந்த கலவையை பாத வெடிப்பின் மீது தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இந்த குறிப்பை தொடர்ந்து 2 வாரங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
தேன்:
தேன் கிருமிகளை எதிர்த்து போராடும் பண்பை கொண்டுள்ளது.
ஒரு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களை ஊற்றி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த பேக்கை இரவு தூங்குவதற்கு முன் தினமும் செய்து வாருங்கள்.
கை மற்றும் கால்களில் நகம் சொத்தை குணமாகுவதற்கு இயற்கையான எளிய சில வழிகள்..!
வாசலின் மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் உள்ள அமில தன்மை பாத வெடிப்பை சரி செய்ய உதவுகிறது.
முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை சுத்தப்படுத்த வேண்டும்.
ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி வாசலின், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை இரவு தூங்குவதற்க்கு முன்பு தடவி காலையில் எழுந்து கழுவ வேண்டும்.
அரிசி மாவு, வினிகர்:
அரிசி மாவு இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி தேன், வினிகர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை கால்களில் அப்பளை செய்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவிய பிறகு பேக்கை அப்ளை செய்யவும். இந்த முறையை வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்து வாருங்கள்.
கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை நிமிடத்தில் மறைய வைக்கும் சில டிப்ஸ்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |