பட்டு புடவையில் உள்ள கறை நீங்க | Pattu Pudavaiyil Ulla Karai Poga in Tamil
பெண்களின் பராம்பரிய உடை புடவை தான். இப்போது எல்லாம் பெண்கள் திருமணம் ஆன பிறகு தான் புடவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று சொல்லலாம். இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் ஏதாவது முக்கியமான விசேஷங்களுக்கு மட்டுமே பெண்கள் புடவை அணிந்துகொள்கின்றன. அந்த புடவை நிச்சயமாக பட்டு புடவையாக இருக்கும். இந்த பட்டுப்புடவையை அடிக்கடி துவைக்கவும் முடியாது. ஏனென்றால் புடவை வீணா போய்விடும். அத்தகைய புடவையில் ஏதாவது கறைபட்டுவிட்டது என்றால் பலர் அடடா இந்த கறையை எப்படி அகற்றுவது என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவு இருக்கும். இங்கு எளிமையான முறையில் பட்டு சேலையில் இருக்கும் கறைகளை எப்படி அகற்றலாம் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
டிப்ஸ்: 1
பொதுவாக நடக்கும் போது பட்டு புடவையின் பார்டரில் கறைகள் படிந்துவிடும் அதனை எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள், பின் அதனுடன் 1/4 ஸ்பூன் ஷாம்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். புடவையின் ஓரங்களில் எங்கெல்லாம் கறை படிந்துள்ளதோ அந்த இடத்தை மட்டும், ஷாம்பு கலந்து வைத்துள்ள தண்ணீரில் நனைத்து லேசாக கசக்கினால் போதும். அவற்றில் இருக்கும் கறைகள் அகன்றுவிடும் பின் வெயிலில் காயவைத்து மடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பொருள் போதும் கை படாமலே அடிப்பிடிச்ச பாத்திரத்தை பளபளனு புதுசா மாறிடும்..!
Pattu Pudavaiyil Ulla Yennai Karai Poga – டிப்ஸ்: 2
பட்டுபுடவையில் உள்ள எண்ணெய் கறை நீங்க.. ஒரு அருமையான டிப்ஸ் இது தான். முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள். பின் புடவையில் எங்கெல்லாம் எண்ணெய் பட்டுள்ளதோ அங்கெல்லாம் பவுடரை சிறிதளவு தூவி ஒரு சிறிய துணியை பயன்படுத்தி நன்றாக தேய்த்துவிடவும். இவ்வாறு தேய்க்கும் போதும் அந்த இடம் வெள்ளையாக தான் இருக்கும். பிறகு ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள், பின் ஒரு சிறிய துணியை அந்த தண்ணீரில் நனைத்து, வெள்ளையாக இருக்கும் இடத்தில் வைத்து தேய்த்தால் அந்த இடத்தில் உள்ள பவுடரும் நீங்கிவிடும் அதேபோல் அவற்றில் உள்ள எண்ணெய் கறையும் நீங்கிவிடும்.
டிப்ஸ்: 3
பட்டுப்புடவையை உள்ள விடாப்பிடியான கறைகளை அகற்ற இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள். அதாவது கடைகளில் கிளிசரின் (Glycerin) விற்பனை செய்யப்படுகிறது அதனை வாங்கிக்கொள்ளுங்கள். இந்த கிளிசரின் புடவையில் உள்ள கறைகளை எளிதாக அகற்ற உதவுகிறது. ஆக புடவையில் எங்கெல்லாம் கறையுள்ளதோ அங்கெல்லாம் ஒரு சொட்டு Glycerin ஊற்றி நன்றாக தேய்த்து விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் அந்த இடத்தை மட்டும் அலசினால் அவற்றில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழைய புடவையை 10 நிமிடத்தில் மெத்தையாக மாற்றிடலாம்.. அதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |