Pedicure Tips At Home in Tamil
இன்றைய பதிவில் வீட்டில் இருந்தபடியே உங்கள் பாதங்களை அழகாக்க சில டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். தன்னை அழகுபடுத்தி கொள்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் முகத்தை மட்டும் அழகாக வைத்து கொண்டால் போதாது. பாதங்களையும் பராமரிக்க வேண்டும்.
நாம் பெரும்பாலும் பாதங்களை பராமரிக்காமல் இருப்பதால் தான் பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற பிரச்சனைகள் வர காரணமாக இருக்கிறது. அதனால் நாம் தலை முதல் பாதம் வரை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அந்த வகையில் வீட்டிலேயே Pedicure செய்வதற்கான சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pedicure Tips -1
முதலில் உங்களுடைய கால் விரல்களில் இருக்கும் Nailpolish -யை Remove செய்து கொள்ளுங்கள். பின் ஒரு வாளி அல்லது டப் எடுத்து கொள்ளுங்கள்.
பின் அதில் உங்களுக்கு தேவையான அளவு சூடான தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து அதனுடன் 1 எலுமிச்சை பழசாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உங்களுடைய கால்களை 15 லிருந்து 20 நிமிடம் வரை வைத்து கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து கால்களை ஒரு துணியை கொண்டு துடைத்து கொள்ளுங்கள்.
நன்றாக துடைத்த பிறகு ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை தூளாக செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதை உங்கள் கால்களில் தடவி 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் சூடான தண்ணீரை கொண்டு கால்களை கழுவி கொள்ளுங்கள்.
இதுபோல வாரம் ஒரு முறை செய்து வந்தால் கால்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பாதம் மென்மையாக இருக்கும்.
பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி? |
Pedicure Tips -2
மேல்கூறியது போல உங்கள் கால்களை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த சூடான தண்ணீரில் 20 நிமிடம் வரை வைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டீத்தூள், வெள்ளை சர்க்கரை 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதை உங்கள் கால்களில் தடவி குறைந்தது 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து உங்கள் கால்களை சூடான தண்ணீரை கொண்டு கழுவி கொள்ளுங்கள்.
இதுபோல மாதத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் உங்கள் பாதம் மென்மையாக இருக்கும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் இந்த முறையை செய்து வரலாம். இதுபோல செய்து வந்தால் பார்லருக்கு செல்லாமலே உங்களுடைய கால்களை அழகாக்க முடியும்.
ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ்..! ஆண் பெண் இருவரும் ட்ரை பண்ணலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும் |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |