வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Updated On: August 19, 2024 12:33 PM
Follow Us:
Pimples on face removal tips in tamil
---Advertisement---
Advertisement

Pimples on Face Removal Tips Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் உள்ள மாசு காரணமாக நமது முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் நமது முகத்தின் பொலிவும் அழகும் பாதிக்கப்படுகின்றது. ஆகாயல் நமது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.

ஆனால் அவையாவும் முழுமையான பலனை அளிக்கவில்லையே என்று கவலை பட்டுக் கொண்டிருப்போம். இனிமேல் கவலைவேண்டாம் இந்த பதிவில் கூறியுள்ள குறிப்புகளை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தாலே போதும் மாற்றம் ஏற்படுவதை நீங்களே காணலாம்.

How to Remove Pimples Naturally and Permanently in Tamil:

Home remedy for pimples and dark spots in tamil

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  2. புதினா – 1 கைப்பிடி அளவு 
  3. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் 
  4. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் 
  5. தண்ணீர் – 1 கப் 

ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பிலை , 1 கைப்பிடி அளவு புதினா மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் 1 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்துகொள்ளுங்கள். அதன் பிறகு ஐஸ் ட்ரையில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்து அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் நன்கு மசாஜ் செய்துகொள்ளுங்கள்.

இந்த டிப்ஸை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி நன்கு முகம் பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

உங்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

டிப்ஸ் – 2

How to remove pimple marks naturally at home in tamil

இரண்டாவது டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. காபித்தூள் – 1 டீஸ்பூன் 
  2. கடலைமாவு – 1 டீஸ்பூன்
  3. அரிசிமாவு – 1 டீஸ்பூன் 
  4. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
  5. தேன் – 1 டீஸ்பூன் 
  6. தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த டிப்ஸை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்

டிப்ஸ் – 3

How to Remove Pimples Naturally and Permanently in Tamil

மூன்றாவது டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கடலைமாவு – 1 டீஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  3. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
  4. தயிர் – 1 டீஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  6. தேன் – 1 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பிறகு முகத்தை எப்போதும் போல் கழுவி விடுங்கள்.

இந்த டிப்ஸை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை