Pineapple Kesari Recipe in Tamil
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறப்பான பண்பு என்றால் அது விருந்தோம்பல் தான். அதாவது ஏதாவது ஒரு முக்கியமான நாட்கள் வந்துவிட்டாலே நமது வீடுகளில் பலவகையான பலகாரங்களை செய்து நாமும் மற்றவர்களும் பகிர்ந்து உண்ணுவோம். அப்படி தான் தீபாவளி அன்றும் பலவகையான பலகாரங்களை செய்து நாமும் மற்றவர்களும் பகிர்ந்து உண்ணுவோம். அன்றைய தினத்தில் நாம் வருட வருடம் செய்து சுவைக்கும் பலகார வகைகளை விட்டுவிட்டு வேறு ஏதாவது புதிய வகையான பலகார வகைகளை செய்து சுவைக்க வேண்டும் என்று நாம் அனைவருக்குமே ஆசை இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் அன்னாசி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அன்னாசி அல்வா செய்வது எப்படி..?
மிகவும் சுவையான மற்றும் எளிமையான அன்னாசி அல்வா எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- அன்னாசி – 1 கப்
- ரவா – 1 கப்
- சர்க்கரை – 1.25 கப்
- நெய் – 8 டீஸ்பூன்
- எண்ணெய்- 6 டீஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
- மஞ்சள் நிற ஃபுட் கலர் – 1 சிட்டிகை
- முந்திரி – 10
- காய்ந்த திராட்சை – 5
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
வாயில் வைத்ததும் வழுக்கி ஓடும் மிகவும் சுவையான பாதாம் அல்வா இப்படி செய்யுங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 8 டீஸ்பூன் நெய் மற்றும் 6 டீஸ்பூன் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள நெய் மற்றும் எண்ணெயில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 5 காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதே கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அன்னாசி பழத்தை சேர்த்து லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஹல்வாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி
ஸ்டேப் – 3
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள நெய் மற்றும் எண்ணெயில் இருந்து 6 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதில் 1 கப் ரவாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதனுடன் நாம் வேகவைத்திருந்த அன்னாசி பழத்தை தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1.25 கப் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை மஞ்சள் நிற ஃபுட் கலர் மற்றும் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அதனுடனே 5 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் கலவையை சேர்த்து நன்கு கலந்து 10 வினாடிகள் நன்கு வேகவிடுங்கள். இறுதியாக அதில் நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான அன்னாசி அல்வா தயார்.
இந்த தீபாவளிக்கு சுவையான காஜு கத்லி ஈசியா செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |