How To Wash Pithalai Pathiram
அக்காலத்தில் எல்லாம் பித்தளை பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பித்தளை பாத்திரமானது அதிக எடை உள்ளதாகவும் தரமனாகவும் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை.. இக்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் பூஜை பாத்திரங்கள் மட்டுமே பித்தளை பாத்திரங்களாக இருக்கின்றன. அப்படியே பித்தளை பாத்திரம் இருந்தாலும் அதனை எடுத்து பயன்படுத்தாமல் வைத்து இருப்பார்கள். ஒரு சில வீடுகளில் பொங்கல் போன்ற பண்டிகைகளில் எடுத்து பயன்படுத்துவார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.. அப்படி உங்கள் வீடுகளில் பித்தளை பாத்திரம் இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் கருத்துப்போன பித்தளை பாத்திரத்தை எளிதில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Pithalai Pathiram Cleaning Powder in Tamil:
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்
- பாத்திரம் தேய்க்கும் பவுடர் – 5 ஸ்பூன்
கிச்சனில் இருக்கும்போது இந்த டிப்ஸ Follow பண்ணுங்க..! வேலை எளிதில் முடியும்..!
முதலில் ஒரு பிளாஸ்டிக் பவுலை எடுத்து கொள்ளுங்கள். அதில், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் பவுடர் (சபீனா பவுடர்) ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
இதனை நன்கு கலந்து விட்டு பித்தளை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தலாம்.
இப்போது, ஒரு ஸ்கரப்பரில் தயார் செய்து வைத்துள்ள பவுடரை எடுத்து பித்தளை பாத்திரத்தை நன்கு தேய்த்து விடுங்கள்.
நீங்கள் நீண்டநாட்களாக பயன்படுத்தாமல் இருந்த பித்தளை பத்திரமாக இருந்தால் அதனை ஒன்றிற்கு இரண்டு முறை தேய்த்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் பல வருடமாக பயன்படுத்தாமல் கருத்து போய் இருக்கும் பித்தளை பாத்திரம் நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.
பூஜை பாத்திரங்கள் பளபளக்க:
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பூஜை பொருட்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் சிறிதளவு புளி, தூள் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து எண்ணெய் பசை மற்றும் கரை இல்லாமல் தேய்த்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்தும் டிட்டர்ஜெண்ட் பவுடர் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் பூஜை பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.
கருகிய பாத்திரம் எதுவா இருந்தாலும் தேய் தேய்யுனு தேய்க்காம ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |