நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க டிப்ஸ்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க போகிறோம். அது என்னவென்றால் நம்மில் பலருக்கும் உள்ள பெரும் பிரச்சனை நமது தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன் இவை இரண்டையும் எப்படி போக்குவது என்பதற்கான டிப்ஸ் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
நமது தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன் இவை இரண்டினாலும் நமது தலைமுடி அதிகம் உதிர்கிறது. இதனை தடுத்து அந்த இடத்தில் புதிய முடியை வளரவைக்கவும் இந்த டிப்ஸ் பயன்படுகிறது.
பொடுகு தொல்லை நீங்க டிப்ஸ்:
டிப்ஸ்-1:
நமது தலையில் உள்ள பொடுகை நீக்க மற்றும் தலைமுடி நன்கு கருமையாக வளர முதல் டிப்ஸிற்கு தேவையான பொருட்கள்.
- கற்றாழை – 1 தண்டு
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- பசும் தயிர் – 3 டீஸ்பூன்
- வேப்பிலை – 2 கைப்பிடி அளவு
செய்முறை :
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் நாம் எடுத்துவைத்திருந்த 1 தண்டு கற்றாழையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த இந்த பேஸ்டுடன் நாம் எடுத்துவைத்திருந்த 3 டீஸ்பூன் பசும் தயிரை சேர்த்து நன்கு கலந்து நமது தலையில் தேய்த்து 30 நிமிடத்திலிருந்து – 1 மணிநேரம் வரை வைத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு நாம் தினமும் பயன்படுத்தும் சாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கலாம். இந்த டிப்ஸை ஒருவாரம் செய்து வந்தால் உங்கள் தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன் தொல்லை நீங்கும் மேலும் உங்களுடைய தலைமுடி நன்கு கருமையாக வளரும்.
டிப்ஸ்-2:
நமது தலையில் உள்ள பொடுகை நீக்க மற்றும் தலைமுடி நன்கு கருமையாக வளர இரண்டாவது டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மிளகு – 2 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- வேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
- கையாந்தரை இலை – 1 கைப்பிடி அளவு
செய்முறை :
ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்திருக்கும் 2 டீஸ்பூன் மிளகு, 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 2 கைப்பிடி அளவு வேப்பிலை, 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் 1 கைப்பிடி அளவு கையாந்தரை இலை இவை அனைத்தையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு இதனை நமது தலையில் தேய்த்து 30 நிமிடத்திலிருந்து – 1 மணிநேரம் வரை வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு நாம் தினமும் பயன்படுத்தும் சாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கலாம்.
இந்த டிப்ஸை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன் தொல்லை நீங்கும் மேலும் உங்களுடைய தலைமுடி நன்கு கருமையாக வளரும்.
இதையும் பாருங்கள் => பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்=> | Tips in Tamil |