Dandruff Control Tips in Tamil
இன்றைய நிலையில் ஆண் பெண் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. இன்னும் சொல்லபோனால் ஆண்களை விட பெண்களுக்கு தான் பொடுகு தொல்லை அதிகம் இருக்கிறது. பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடிக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டு முடி கொட்ட தொடங்குகிறது. அதனால் இந்த பொடுகு பிரச்சனையை சரி செய்ய இயற்கையான டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பொடுகு தொல்லையை அடியோடு விரட்ட டிப்ஸ்:
தேவையான பொருட்கள்:
- நிலவேம்பு இலை – 2 கைப்பிடி
- தயிர் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 5
ஹேர் பேக் செய்முறை:
நாம் எடுத்து வைத்துள்ள நிலவேம்பு இலைகளை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின் இந்த இலையை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தயிர் 1 ஸ்பூன் மற்றும் வெங்காயம் இவற்றை சேர்த்து நன்கு மைபோல அரைத்து கொள்ள வேண்டும்.
அப்ளை செய்யும் முறை:
இந்த நிலவேம்பு ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முதல் நாளே தலையில் எண்ணெய் வைத்து கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஹேர் பேக் முடிக்கு அப்ளை செய்வதாக இருந்தாலும், முதல் நாளே முடியில் எண்ணெய் வைத்து கொள்ள வேண்டும்.
ஹேர் பேக் அப்ளை செய்யும் போது முடி எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்க வேண்டும். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். நிலவேம்பு ஹேர் பேக் முடியின் அடிப்பகுதியில் படுவது போல அப்ளை செய்து கொள்ளுங்கள். பின் ஒரு 20 நிமிடம் கழித்து முடியை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளுங்கள்.
இதுபோல வாரம் 1 முறை என்று 5 அல்லது 6 வாரங்கள் செய்து வந்தால் பொடுகு தொல்லை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
தலை முடி அடர்த்தியாகவும், பொடுகு இல்லாமலும் வளர இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்…! தடவி குளித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..! |
பொடுகு தொல்லை நீங்க:
தேவையான பொருட்கள்:
- நிலவேம்பு இலை – 1 கைப்பிடி
- தயிர் – 1 டீஸ்பூன்
- கற்றாழை
- வெந்தயம்
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் 1 கைப்பிடி அளவு நிலவேம்பு இலைகளை எடுத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் தயிர், சிறிதளவு கற்றாழை ஜெல் மற்றும் ஊறவைத்த வெந்தயம் இவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு 20 நிமிடம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் அலசி கொள்ள வேண்டும். இதுபோல வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும். முடி நன்றாக வளரும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |