வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

Advertisement

வீட்டை அழகு படுத்துவது எப்படி | Pongal House Cleaning Tips in Tamil

புதுவருடம் வந்துவிட்டது. அடுத்து வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க..! பொங்கல் வேலை என்றால் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி பொங்கல் 14 வரை சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்..! இதை அனைத்தையும் பார்த்து செய்து வீட்டில் அனைவருமே கோவத்தில் இருப்பார்கள். அவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் வீட்டை சுத்தம் செய்ய 14 நாட்கள் தேவைப்படுமா என்ன..!

பொதுவாக வீடு என்றால் 2 ரூம், சமையல் அறை, பூஜை அறை, பாத்துரூம் அவ்வளவு தானே இருக்கும் இதை அனைத்துமே குறைந்தது 4 நாட்கள் அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் செய்துவிட முடியுமே..! அப்படி என்ன தான் செய்வீர்கள்..? இனி கவலையை விடுங்கள் வீட்டை மிகவும் எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸை இந்த பதிவில் காண்போம் வாங்க..!

Pongal House Cleaning Tips in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்: 1

முதல் நாள் நாம் வீட்டில் உள்ள அனைத்து இடத்திலும் உள்ள தேவையில்லாத பொருட்களை வெளியே எடுத்துவைத்துவிடலாம்.

வீட்டின் சமையல் அறையில் பிளாஸ்டிக் பாட்டில் உடைந்து இருக்கும் அதனை எடுத்துவிடலாம். ரூமில் பழைய டிரஸ் பத்தாமல் இருக்கும் அனைத்தையும் தனியாக எடுத்துவைத்துவிடலாம்.

இப்போது பூஜை.. பூஜை அறை எப்போதுமே சுத்தமாகத்தான் இருக்கும் இருந்தாலும் அங்கு இருக்கும் உடைந்த சாமி படம் அனைத்தையும் எடுத்துவிடலாம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துவைக்கலாம்.

இப்போது வீட்டில் தேவையில்லாத பொருட்களை எடுத்து விட்டோம் வாங்க அடுத்த டிப்ஸை பார்ப்போம்.!

பொங்கல் வேலையை சேர்த்து முடித்துவிடங்கள் 👉👉 டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

டிப்ஸ்: 2

அடுத்து நாம் வீட்டில் கதவுகள் ஜன்னல்கல் அனைத்திலும் இருக்கும் திரையை எடுத்து துவைக்க போட்டுவிட்டு, அதேபோல் வீட்டில் இறந்தவர்களின் படத்தில்,  நிலைகளின் அலங்கரிக்க மாட்டி இருக்கும் பூச்செண்டுகளை எடுத்து துவைக்க போட்டுவிடுவோம்.

டிப்ஸ்: 3

அடுத்தது வீட்டை சுற்றி ஒட்டடை அடிக்க வேண்டும். கீழ் எதுவும் பொருட்கள் இருந்தால் அதில் துணைகளை போட்டு மூடிவைக்க வேண்டும். அதேபோல் வீட்டை சுற்றி ஒட்டடையை அடித்துவிட வேண்டும்.

டிப்ஸ்: 4

அடுத்து வீட்டில் உபயோகிக்காத பொருட்கள் இருக்கும் அதனை கழுவிவைக்க வேண்டும். அதாவது பித்தளை பாத்திரம் சில்வர் பாத்திரம் அனைத்தையுமே கழுவி வைக்க வேண்டும்.

டிப்ஸ்: 5

அடுத்து மளிகை பொருட்கள் கொட்டி வைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் அதனை நியூஸ் பேப்பரில் மடித்துவைத்துவிட்டு அனைத்து பொருட்களையும் கழுவி வைத்துவிடவும்.

டிப்ஸ்: 6

அடுத்து பாய் போர்வை, தினமும் பயன்படுத்தும் துணிகள் இருக்கும் அனைத்தையும் துவைத்து காயவைக்க வேண்டும். உங்கள் வீட்டில் எப்போதாவது பயன்படுத்தும் துணிகளை துவைக்க வேண்டும் என்று நினைத்தால் துவைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு வேலைகளை பிரித்துக்கொள்ள வேண்டும்.

அதாவது பாத்திரம் கழுவது என்றால் அது ஒரு நாள். துணி துவைப்பது. வீட்டை ஒட்டடை அடிப்பது என்று தனி தனியாக பிரித்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் 5 நாட்களுக்குள் அல்லது 3 நாட்களுக்குள் செய்து முடிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement