பொங்கல் சீர் வரிசை வைக்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

பொங்கல் சீர்வரிசை | Pongal Seer Varisai List

நண்பர்களுக்கு வணக்கம் திருமணமானதும் முதல் வருகின்ற தைப்பொங்கல் விழாவினையும் மணமகளின் புகுந்த வீட்டில் கொண்டாடுவது என்பது தமிழ்நாட்டில் வழக்கமான ஒரு நிகழ்வாகும். சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் இந்த தைபொங்கலை ஒட்டி சீர்வரிசைகள் கொடுப்பதை ஒரு சடங்காக செய்து வருகிறார்கள் மணமகள் வீட்டார். இந்த பொங்கல் சீர் வரிசை பொறுத்தவரை அவரவர் சக்திக்கு ஏற்றது போல் சீராக கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது பொங்கலுக்கு பிறந்த வீட்டினர், பெண்ணின் புகுந்த வீட்டிற்கு எந்த மாதிரியான பொருட்களை சீராக கொடுப்பார்கள் என்பதை பற்றி அறியலாம் வாங்க. குறிப்பாக இந்த பதிவு பொங்கல்  சீர் வரிசை வைப்பதில் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதில் அதிக குழப்பம் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

பொங்கல் சீர் வரிசை வைக்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

 1. பொங்கல் பானை
 2. அச்சு வெல்லம்
 3. பச்சரிசி
 4. செங்கரும்பு
 5. மஞ்சள் கொத்து
 6. தேங்காய்
 7. பழம்
 8. பாக்கு வெற்றிலை
 9. பட்டுவேட்டி
 10. பட்டுப்புடவை
 11. நல்லெண்ணெய்
 12. கருப்பட்டி
 13. கைமுறுக்கு
 14. வாழை இலை
 15. காய்கறிகள்
 16. ஏலக்காய்
 17. முந்திரி
 18. குத்து விளக்கு
 19. சந்தனம்
 20. குங்குமம்
 21. விபூதி பொட்டலம்
 22. ஊதுபத்தி
 23. விளக்குதிரி
 24. தீப்பெட்டி
 25. சாம்பிராணி
 26. தங்ககாசு அல்லது வெள்ளிப்பணம்

இவைகளையெல்லாம் பெண் வீட்டினர், மாப்பிளை வீட்டிற்கு பொங்கல் சீராக வைப்பார்கள். மேலும் இதனுடன் பணமும் வைத்துக்கொடுப்பார்கள். அதுவே கிராமமாக இருந்தால் கொம்புசாயம், கழுத்து மணி, தலைக்கயிறு இது போன்ற பொருட்களும் அந்த சீர் வரிசையில் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil