பூக்கள் ஏழு நாட்கள் வரை கெடாமல் இருக்க டிப்ஸ்

பூ வாடாமல் வைப்பது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் பூக்கள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..! இந்த பிரச்சனை அதிகளவு அனைவரின் வீட்டில் உள்ள பெண்களுக்கும் இருக்கும். ஏன் பெண்ணை மட்டும் சொல்கிறேன் என்றால் பெண்கள் தான் தினமும் கஷ்டப்பட்டு பூக்களை கட்டி அதனை வாடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் சில நாட்களில் பூக்கள் கெட்டு விடுகிறது. ஆகவே பூக்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ் பற்றி பார்க்கப்போகிறோம்.

பூ வாடாமல் வைப்பது எப்படி?

அதிகளவு பெண்கள் விரும்புவது மல்லிகை பூக்களை தான். இந்த விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் அதனால் வீட்டில் உள்ளவர்கள் உடனே கல்யாணத்துக்கும், கோவில்களுக்கும் தலையில் வைத்து செல்ல 2 நாட்களுக்கு முன்பே பூக்களை கட்டி வைத்து விடுவார்கள். ஒரு பூ எவ்வளவு நாட்கள் தாங்கும் என்றால் 2 நாட்கள் என்று அனைவரும் சொல்வீர்கள் ஆனால் கிடையாது பூக்கள் 7 நாட்கள் வரை புதியது போல் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு நிறைய வழிகள் இருக்கு அதனை இப்போது ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.

டிப்ஸ் -1

பேருந்து நிற்கும் இடத்தில் பூக்கள் விற்பார்கள் இது அனைவருமே பார்த்திருப்பீர்கள். சிலர் அதனை வாங்கி வந்து கட்டி வைத்துக்கொள்வீர்கள். முன்பு பூக்களை இலையில் வைத்து மடித்து கொடுப்பது பழக்கம் இப்போது பாலீத்தின் பையில் தான் வைத்து தருகிறார்கள்.  பூக்களை வாங்கும் போது இதனை அனைவருமே கவனித்திருப்பீர்கள். 1 கிலோ பூ என்று சொன்னால் உடனே அந்த பாலீத்தின் பையில் போட்டு கட்டி கொடுப்பார்கள்.

அது போல் ஏன் செய்கிறார்கள் என்றால் அதனை பையில் போட்டு வைத்தால் உடனே பூ வாடி விடும் அதனால் பூக்கள் என்று கேட்டால் தான் தருவார்கள்

முதலில் பூக்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்த உடன் அந்த பையிலிருந்து எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் தெளித்து வைத்துக்கொள்ளவும்.

 பூக்கள் வாடாமல் இருக்க

பின்பு அதனை காற்றோட்டமாக போட்டு நூலில் கட்டிக்கொள்ளவும்.

மல்லிகை பூவாக இருந்தால் மொட்டாக இருக்கும்போதே கட்டி தண்ணீர் தெளித்து காற்று இல்லாத கவரில் போட்டு முடிச்சி போட்டு வைத்தால் 15 நாட்கள் வரை மல்லிகை பூ கெட்டுப்போகாமல் இருக்கும்.

முல்லை பூவாக இருந்தாலும் அதனை பூக்கும் முன்பு காட்டினால் மட்டுமே அதனை எளிதாக கட்ட முடியும் இல்லையென்றால் கட்டவும் முடியாது சீக்கிரத்தில் வீணாகும். ஆகவே பூக்களை கட்டி காற்று இல்லாமல் பையில் போட்டு முடிச்சி போட்டு அதனை அழுத்தினால் உள்ளிருக்கும் காற்று போய் விடும்.

இப்போது இரண்டு கவரையும் சேர்த்து ஒரு செம்படத்தில் போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். ஏன் இதில் வைக்க சொல்கிறேன் என்றால் பிரிட்ஜியில் வைத்தால் கரண்ட் இல்லையென்றாலும் அதனுடைய குளிர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். இதனை செய்து பாருங்கள் உங்களுக்கு 15 நாட்கள் ஆனாலும் பூக்கள் கேட்டு போகாமல் இருக்கும்.

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tips in Tamil