அரிசி முதல் கோதுமை மாவு வரை பூச்சிகள் வராமலும், நீண்ட நாட்களுக்கு உழைத்து வரவும் இப்படி பண்ணுங்க..!

Advertisement

அரிசியில் வண்டு வராமல் இருக்க

நாம் என்ன தான் சமையலறையை சுத்தமாக வைத்தாலும் பொருட்களில் எறும்புகள் வந்துவிடும். எறும்புகள் வராமல் இருக்க மருந்துகளை பயன்படுத்துவோம். ஆனால் அரிசி மற்றும் அஞ்சறை பெட்டி பொருட்களில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் வந்துவிடும். பூச்சிகள் வந்ததும் வெயிலில் காய வைப்பீர்கள். ஆனால் அரிசியில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் வருவதற்கு முன்னேரே பாதுகாத்து கொள்ளலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

அரிசியில் எறும்பு வராமல் இருக்க:

அரிசியில் வண்டு வராமல் இருக்க

அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைக்க மாட்டோம். மொத்தமாக ஒரு 10 கிலோ அந்த மாதிரி தான் வாங்கி வைப்போம். அரிசியில் வண்டு வருவதற்கு முக்கிய காரணம் ஈர கையோடு அரிசியை எடுப்பதால் தான் வண்டுகள் வருகின்றது.

வண்டுகள் வரமால் இருப்பதற்கு வெங்காய தோல், பூண்டு தோலை காய வைத்து அரிசி பானையில் சேர்த்து கொள்ளவும்.

துவரம்பருப்பு, உளுந்தில் வண்டுகள் வராமல் இருப்பதற்கு:

துவரம்பருப்பு, உளுந்தில் வண்டுகள் வராமல் இருப்பதற்கு

வேப்ப குச்சியை சிறியதாக உடைத்து காய வைத்து துவரப்பருப்பு மற்றும் உளுந்து இருக்கும் டப்பாவில் சொருகி வைத்தால் வண்டுகள் வராது.

கோதுமை மாவில் வண்டுகள் வராமல் இருக்க:

கோதுமைமாவில் வண்டுகள் வராமல் இருக்க

ஒரு வெள்ளை துணியில் கல் உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து துணியை கட்டி கொள்ளவும். இந்த துணியை கோதுமை மாவு இருக்கும் பாத்திரத்தின் உள்ள வைத்து விடவும். இப்படி வைப்பதினால் கோதுமை மாவு ஒரு வருடம் ஆனாலும் கோதுமை மாவில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் இருக்கும்.

பெருங்காய தூள் கட்டி பிடிக்காமல் இருக்க:

பெருங்காய தூள்

பெருங்காய தூள் கொஞ்சம் நாள் பயன்படுத்தியதும் கட்டி பிடித்து விடும். இதனை தவிர்ப்பதற்கு பெருங்காய தூள் டப்பாவில் 2 பச்சை மிளகாயை உள்ளே வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய இப்படி பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement