வீட்டு குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே.! பூஜை அறையில் உள்ள பொருள்களின் எவ்வளவு தான் கவனமாக கழுவினாலும் பளிச்சென்று ஆகாது. மேலும் பூஜை அறையில் சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே பூஜை அறையை அழகாக வைத்திருக்கலாம். பூஜை அறை குறிப்புகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சந்தனம் பளிச்சென்று தெரிய:
பெரும்பாலானவர்கள் சந்தனத்தை சாமி போட்டாவுக்கு வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் சந்தனம் வைக்கும் போது பளிச்சென்று தெரியாது. அதனால் சந்தனத்தை குழைக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்காமல் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பால் கலந்த சந்தனத்தை சாமி போட்டாவுக்கு வைத்து பாருங்கள் பளிச்சென்று இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ பூஜை அறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
விளக்கேற்றும் போது வாசனையாக இருக்க:
வீட்டில் பூஜை அறையில் பக்தி, சாம்பிராணி காட்டும் போது எப்படி வாசனையாக இருக்கின்றதோ அது போல் விளக்கேற்றும் போதும் வாசனையாக வைக்க முடியும். அதற்கு விளக்கேற்றும் எண்ணெயில் 1 தேக்கரண்டி தசாங்க பவுடர் அல்லது ஜவ்வாது பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பயன்படுத்தி விளக்கேற்றினால் வாசனையாக இருக்கும்.
மஞ்சள், குங்குமம் கட்டி ஆகாமல் இருக்க:
மஞ்சள் மற்றும் குங்குமம் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அது கட்டி பிடிப்பதை விட பூச்சி பிடித்துவிடும். இதனை தடுப்பதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இருக்கும் பாத்திரத்தில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்படி பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதால் பூச்சியும் பிடிக்காது அதுமட்டுமில்லாமல் வாசனையாகவும் இருக்கும்.
சாமி படங்களை சுத்தப்படுத்த:
சாமி படங்களை தண்ணீர் தொட்டு துடைக்க முடியாது. துணியை பயன்படுத்தி துடைப்போம் அல்லவா.! இப்படி துடைக்கும் போது சாமி போட்டோ பளிச்சென்று இருக்காது. இதனை பளிச்சென்று ஆகுவதற்கு நீங்கள் எந்த Hand Wash பயன்படுத்தினாலும் அதனை ஒரு துணியில் சிறிதளவு ஊற்றி கொள்ளுங்கள். இதனை பயன்படுத்தி துடைத்து பாருங்கள் ஒரு நிமிடத்தில் பளிச்சென்று ஆகிவிடும்.
எண்ணெய் பாட்டிலில் பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் இருக்க:
நீங்கள் எந்த எண்ணெய் பாட்டிலை பயன்படுத்தினாலும் கையில் எடுக்கும் போதெல்லாம் பிசுபிசுப்பு தன்மை இருந்து கொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஒரு மஞ்சள் பை அல்லது ஏதாவது ஒரு துணி பை எடுத்து கொள்ளுங்கள். இதனை நான்கு பக்கங்களையும் நறுக்கி கொண்டு பாட்டிலை சுற்றி கொண்டு கட்டி கொள்ளுங்கள். துணியை பயன்படுத்தும் பொழுது எண்ணெயை உறிஞ்சிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |