உணவு பொருட்களை பாதுகாக்க எளிய வழிகள்
நமது உணவு தேவைகளில் முக்கியமானது காய்கள் மற்றும் பழங்கள். பொதுவாக நாம் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை ஒரே வேலையாக வாங்கி நம்முடைய பிரிட்ஜில் அடுக்கி விடுவோம். இப்படி செய்வதால், வேலைகளுக்கு செல்லும் பலருக்கு வேலை மிச்சமாகிறது. கோடைகாலங்களில் இது நல்ல வழி என்றாலும். குளிர்காலத்தில் நம்மால் அதிகப்படியான உணவுப்பொருட்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்த முடியாது. காரணம் காற்றில் உள்ள ஈரப்பதம். அதனால் உணவுப்பொருட்களை கூடிய விரைவில் அழுகிவிடும். இதனால் நம்மால் நமக்கு தேவையான பொருட்களை சேமிக்க முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வழிதான் என்ன? நமக்கு கிடைக்கும் சிறிது ஓய்வில் நாம் வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்குகிறோம். ஆனால் அதனை சரியாக பாதுகாக்க நமக்கு தெரிவதில்லை. இன்றைய பதிவில் மழை காலங்களில் உணவுப்பொருட்களை பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உணவுப்பொருட்கள் வீணாக்காமல் இருக்க சில Tips:
1. உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்கவும்
நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். விரைவில் வீணாகும் பொருட்களை குறைந்த அளவில் வாங்குங்கள்.
2. பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியது :
உணவு பொருட்களை வாங்கும் முன் அதற்கான திட்டமிடலை தொடங்குங்கள். அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். வீணாகும் பொருட்களை வாங்கும் போது தேவை அறிந்து வாங்குங்கள். அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். பொருட்கள் விளக்குவதை தடுக்கலாம்.
3. பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும் போது கவனம் தேவை:
காய்கறி மற்றும் பழங்கள் குறுகிய நாட்களிலே கெட்டுவிடும். அதனால் அதன் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். உங்களின் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள். அதிகபட்சம் 1 வாரத்திற்கான பொருட்களை வாங்குவது நல்லது.
4. உணவை புத்திசாலித்தனமாக சேமிக்க வேண்டும்.
உங்கள் குளிர்சாதன பெட்டியில் நீங்கள் உணவு பொருட்களை சேமிக்கும் போது, புதிய பொருட்களை பின்புறமாகவும் பழைய பொருட்களை முன்புறமாகவும் அடுக்க வேண்டும்.
குளிர்சாதனப்பெட்டியில் உணவை வைக்கும் போது காற்று புகாத கொள்கலன்களை பயன்படுத்தவும்.
5. உணவு லேபிள்களை பார்த்து வாங்கவும்.
உணவுப்பொருட்கள் வாங்கும் போது “தயாரிக்கப்பட்ட தேதி ” மற்றும் “பயன்படுத்துவதற்கு கடைசி தேதி ” போன்ற தேதிகளை பார்த்து வாங்கவும். இப்படி பார்த்து வாங்குவதால் உங்களின் உணவு பொருட்களின் தரம் கணிக்கப்படுகிறது. பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள்பயன்படுத்த வேண்டும் என்னும் தகவல் கிடைக்கும்.
மழைக்காலங்களிலும் காய்கறி அழுகாமல் இருக்க என்ன செய்யுறது?
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |