உங்களின் முகத்தின் அழகை மேம்படுத்துவதற்கு இந்த பொருட்களை மட்டும் பயன்படுத்திவிடாதீர்கள்

Advertisement

முகத்தில் தடவ

முகத்தின் அழகை மேம்படுத்துவதற்காக ஆண்களும் சரி, பெண்களும் சரி பல விதமான குறிப்புகளை பயன்படுத்துகிறார்கள். அதிலும் பெண்கள் தான் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள். அழகை கூட்டுவதற்காக சில நபர்கள் பியூட்டி பார்லர் செல்வார்கள், சில நபரகள் இயற்கையாக கிடைக்க கூடிய சமையலறை பொருட்களை வைத்து அழகு படுத்துவார்கள். நீங்கள் இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுத்தாலும் உங்களுக்கே தெரியாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

முகத்தில் சூடான நீர்:

முகத்தை கழுவும் போது ஒரு போதும் சூடான நீரில் கழுவி விடாதீர்கள். இப்படி கழுவதினால் உங்களின் முகத்தில் இயற்கையாகவே இருக்கும் ஈரப்பதத்தை குறைத்து விடும். மேலும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரே வாரத்தில் பிக்மென்டேஷனை இருந்த இடம் தெரியாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!

தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவினால்:

தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவினால்

முக அழகிற்கு தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவீர்கள். ஆனால் இந்த தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. அதனால் இதை அதிகம் பயன்படுத்தும் போது முகத்தில் வறட்சி மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் இதை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

இலவங்கப்பட்டை தீமைகள்:

இலவங்கப்பட்டை தீமைகள்

இலவங்கப்பட்டை உணவின் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்துவோம். ஆனால் இதை முகத்தின் அழகிற்காக பயன்படுத்த கூடாது. இதை பயன்படுத்தினால் முகத்தில் எரிச்சலை உண்டாக்கும். அதனால் இந்த பொருளை தவிர்த்துடுங்கள்.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்:

காய்கறி எண்ணெயை பயன்படுத்தும் போது நல்ல பலனை கொடுத்தாலும் நாளடைவில் உங்களின் முகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் போது உங்களின் முகத்தில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும்.

ஷாம்பு இயற்கை:

நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் ஷாம்பூ என்பது தலைமுடியை சுத்தம் செய்வதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அதை நீங்கள் முகத்திற்க்கு பயன்படுத்தினால் முகத்தின் அழகை கெடுத்து விடும்.

டூத் பேஸ்ட் தீமைகள்:

டூத் பேஸ்ட்டை பருக்கள் மறைவதற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது என்று நினைக்கின்றனர். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது முகம் முழுவதும் சிவந்த நிறத்தில் காணப்படும். மேலும் முகத்தில் இருக்கும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து முகத்தின் நிறத்தை மாற்றி விடும். அதனால் இந்த பொருளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

பேக்கிங் சோடா தீமைகள்:

பேக்கிங் சோடா தீமைகள்

பேக்கிங் சோடாவை நீங்கள் எப்படி பயன்படுத்தினாலும் முகத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். என்ன பிரச்சனை என்றால் முகத்தில் பிக்மென்ட்டேஷன் வருவதற்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களது தலை முடியை பாதுகாப்பதற்கு இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே..!

உப்பு மற்றும் சர்க்கரை:

உப்பு மற்றும் சர்க்கரை

முகத்தின் அழகை கூட்டுவதற்கு சர்க்கரையை அதிகமாக பயன்படுத்துவீர்கள். ஆனால் சர்க்கரையை அதிகமாக பயன்படுத்தும் போது முகம் சிவந்த நிறத்தில் காணப்படுவது, வீக்கம் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எலுமிச்சை முகத்திற்கு:

எலுமிச்சை முகத்திற்கு

எலுமிச்சை பழத்தை முகத்திற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இதை அதிகமாக பயன்படுத்தும் போது முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இது போன்று டிப்ஸ் பற்றிய தகவல்களை தெரிந்து  கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil

 

Advertisement