புளித்த மாவை புதிய மாவு போல செய்வதற்கு டிப்ஸ்

idli maavu recipe in tamil

புளித்த மாவை சரி செய்வது எப்படி.?

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் இட்லி மாவை புதிதாக அரைத்த மாவு போல ஆக்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் அதனை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம். இட்லி மாவு 1 நாளுக்கு பிறகு புளிக்க ஆரம்பித்துவிடும். அதனை இட்லி ஆக ஊற்றினாலும், தோசையாக ஊற்றினாலும் சாப்பிட முடியாது. சில பேர் புளித்து போன மாவை பயன்படுத்தமாட்டார்கள். புளித்த மாவை இனிமேல் பயன்படுத்தலாம். வாங்க எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ மாவு அரைத்த உடனே புளிக்க வைப்பதற்கு டிப்ஸ்

பழைய இட்லி மாவை அரைத்த மாவு போல ஆக்குவதற்கு தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 1/2 தேக்கரண்டி
  • சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
  • வெண்ணெய் – 1தேக்கரண்டி

பழைய இட்லி மாவை அரைத்த மாவு போல எப்படி செய்வது.?

டிப்ஸ்: 1

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, வெண்ணெய் மூன்றையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல மிக்ஸ் செய்யவும்.

அடுத்து புளித்த மாவுடன் மிக்ஸ் செய்த பேஸ்டை சேர்க்கவும். இரண்டையும் நல்லா மிக்ஸ் செய்யவும். பின் தோசை ஊற்றி பாருங்கள் புளித்த வாசனையே இருக்காது. சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

பழைய இட்லி மாவை அரைத்த மாவு போல ஆக்குவதற்கு தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு – 2 பவுல்
  • ரவை – 3/4 பவுல்
  •  உப்பு -தேவையான அளவு
  • சர்க்கரை – 1/2 தேக்கரண்டி

டிப்ஸ்: 2

கோதுமை மாவு, ரவை, சர்க்கரை, உப்பு போன்றவற்றை மிக்சியில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு அரைப்பது போல் அரைத்து கொள்ள வேண்டும்.

கோதுமை பிடிக்காதவர்கள் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

புளித்த மாவுடன் அரைத்து எடுத்த மாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாகியதும் தோசை ஊற்றி எடுங்கள்.

புளித்த மாவு போல இருக்காது. அரைத்த மாவு போல சூப்பரா இருக்கும்.

பழைய புளித்து போன மாவை இனி waste செய்யாதீர்கள். மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸ்களிலுருந்து  எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். புளித்த மாவு அரைத்த மாவு போல சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil