புளியோதரை பொடி
இப்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துப்பொருட்களும் instant-ஆக கிடைக்கிறது. ஆனால் அவற்றின் சுவை ? கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். நாம் கடைகளில் வாங்கும் instant பொருட்களின் சுவை மற்றும் தரம் சரியாக இல்லாததால் நாம் வீட்டிலே அதை தயாரிக்க தொடங்குவோம். ஆனால் அதுவும் நமக்கு நாம் எதிர்பார்த்த சுவையை தராது. அதுவும் புளியோதரை என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதுவும் கோவில் பிரசாதம் தனி சுவைத்தான். அந்த சுவையில் வீட்டில் செய்யலாம் என்றால் சுவை எப்போதும் மாறுபடுகிறது. அதற்கு தீர்வாகத்தான் இன்று ஐயர் வீட்டு புளியோதரை பொடி செய்வது எப்படி என்று எந்த பதிவில் பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
புளியோதரை பொடி தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 10
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
மிளகு -1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 10
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
புளி – போதுமான அளவு ( 1 எலுமிச்சை அளவு )
நல்ல எண்ணெய் – 6 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
புளியோதரை பொடி செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வெள்ளை எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் நன்றாக வதக்கவும்.
இவை நன்றாக வதக்கிய பின்னர் வேர்க்கடலை, மிளகு சேர்த்து வதக்கவும். பின்னர் இவற்றை தனியாக சேகரிக்கவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் தேவையான அளவு புளி எடுத்து அதனை சிறிது சிறிதாக பிரித்து நன்றாக வதக்கவும்.
புளியில் உள்ள ஈரப்பதம் போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்தது வறுத்து வைத்துள்ள பருப்புகளை புளியுடன் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பெருங்காயம் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இந்த கலவையை 20 வரை நன்றாக ஆற விட்டு பின்னர் அதனை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது உங்களுக்கு கோவில் சுவையில் புளியோதரை தயாரிக்க தேவையான மசாலா ரெடி.
இதனை காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து பாதுகாத்துக்கொள்ளவும்.
என்றென்றும் தித்திக்கும் செட்டிநாடு காளான் மசாலா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |