மழைக்காலத்தில் துணிகள் காய
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த மழை ஒரு மணி நேரம் பெய்தாலும் நம்மால் தாங்க முடியாது. ஏன்டா இந்த மழை பெய்து என்று எரிச்சலூட்டும் உணர்வை தருகிறது. மழை பெய்து வீட்டில் இருந்தால் ஒன்றும் தெரியாது. அதுவே பள்ளி அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்கும். அதுவும் துணிகளை காய வைப்பது பெரிய போராட்டமாக இருக்கும். அன்றைய நாள் பள்ளி சீருடை, வேலைக்கு செல்லும் ஆடை போன்றவை காயது. துணிகளை எப்படி தான் காய வைப்பது என்று யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
துணிகளை காய வைக்க டிப்ஸ்:1
முதலில் நீங்கள் துணிகளை துவைத்து விட்டு நன்றாக அலசிய பிறகு தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து கொள்ளவும். அதன் பிறகு இதனை உதறி விட்டு கொடியில் போட்டு தண்ணீரை வடிய விட வேண்டும்.
தண்ணீர் வடிந்த பிறகு டேபிள் பேன் வைத்து தன முன்னடி நாற்காலி அல்லது ஸ்டூல் வைத்து காய போட வேண்டும். இதிலே 90% துணி காய்ந்து விடும்.
நீங்கள் இதனை பயன்படுத்துவதற்கு முன் அயர்ன் செய்து விட்டு அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். இது போல செய்வதினால் துணிகள் காய்வதோடு மட்டுமில்லமால் துணிகளில் உள்ள சுருக்கமும் போகி விடும்.
மழைக்காலத்தில் மாவு புளிக்க மாட்டிங்குதா அப்போ காய்ந்த மிளகாய் போதும்..
துணிகளை காய வைக்க டிப்ஸ்:2
அடுத்து உங்க வீட்டில் ஹேர் ட்ரையர் இருந்தால் துணி காய வைப்பதற்கு ஈசியாக இருக்கும். துணிகளை துவைத்து நன்றாக பிழிந்து விட்டு கொடியில் சேர்த்து தண்ணீரை வடிய விட வேண்டும். தண்ணீர் ஓட்ட வடிந்த பிறகு ஒரு மேஜையின் மீது துணியை போட்டு அதன் மேல் ஹேர் ட்ரெயரை காட்டி துணிகளை காய வைக்க வேண்டும்.
துருப்பிடித்த பாத்ரூம் பைப்களை 10 நிமிடத்தில் பளிச் என்று மாற்ற என்ன செய்யலாம்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |