குண்டு குண்டு ரசகுல்லா இனி வீட்டிலேயே செய்யலாம்

Advertisement

ரசகுல்லா செய்வது எப்படி

என்னா நண்பர்களே தீபாவளி வர இன்னும் 11 நாட்களே உள்ளன. என்ன பலகாரம் செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பீர்கள். எப்படி யோசித்தாலும் எப்போதும் போல முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமுன் தான் செய்ய போகிறீர்கள் என்றால் இந்த பதிவை முழுமையாக படிங்க. ஏனென்றால் குலாப் ஜாமுன் பலருக்கும் பிடிக்கும், ஆனால் சில பேர் இதனை வீட்டில் செய்வார்கள், சில பேர் கடையில் தான் வாங்குவார்கள். ஏனென்றால் வீட்டில் செய்யும் போது குலாப் ஜாமுன் கஷ்டமோ என்று நினைப்பார்கள். அது போல தான் ரசகுல்லாவும் கஷ்டம் என்று நினைத்து வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால் ரொம்ப ஈஸிங்க, மூன்று பொருளை வைத்து ரசகுல்லா ஈஸியா செய்யலாம். வாங்க எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

சீனி- 1/2 கிலோ முதலில் பாலை எடுத்து நன்றாக காய்த்து கொள்ளவும், அதுவும் தண்ணீர் சேர்க்காத பாலாக எடுத்து கொள்ளவும். இதில் மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து அதனின் சாறுகளை பிழிந்து கொள்ளவும்.

கொதிக்கின்ற பாலில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும். எலுமிச்சை சாற்றை சேர்த்ததும் பால் ஆனது திரிந்த நிலை ஏற்படும், அப்போது அடுப்பை அணைத்துவிடவும்.

பால் -1/2 லிட்டர் இதனை ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி வடிகட்டி கொள்ளவும், மறுமுறை அதிலேயே தண்ணீர் ஊற்றி வடிகட்டி கொள்ளவும், ஏனென்றால் எலுமிச்சை சாற்றின் வாசனை வரும் அதனால் தான் தண்ணீர்  ஒரு முறை ஊற்றினால் நீங்கிவிடும்.

அடுத்து இதனை நன்றாக சப்பாத்தி மாவு பிணைவது போல பிணைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

எலுமிச்சை பழம்-3 அடுத்து சீனி பாகு செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்று கொள்ளவும். அதனுடன் சீனியை சேர்த்து கொதிக்க விடவும். ரொம்ப சுண்டாமல் சிரப் பதத்திற்கு வந்த பிறகு உருட்டி வந்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் வேகமான தீயில் வேக விடவும்.
தண்ணீர்-1/2 லிட்டர் அதன் பிறகு 10 நிமிடம் குறைவான தீயில் வேக விட வேண்டும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 8 மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.

8 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக ஊறி ரசகுல்லா சூப்பரா இருக்கும்.

இந்த தீபாவளிக்கு இந்த மாதிரி முறுக்கு சாப்பிட்டு பாருங்க..அப்புறம் எல்லா தீபவளிக்கு இந்த முறுக்கு த செய்வீங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement