Rat Killer Home Remedy in Tamil
பொதுவாக ஒரு சிலரின் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே அடிக்கடி ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படும். அதனால் உங்களின் மனது மிகவும் கஷ்டப்படும். நீங்களும் பலவகையான மாற்றங்களை உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்படுத்துவீர்கள். ஆனாலும் உங்கள் வீட்டில் தொடர்ந்து இந்த உடல்நல குறைபாடு பிரச்சனை என்பது நீடித்து கொண்டே இருக்கும். அது எப்படி என்பது உங்களுக்கு ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிக அளவில் உள்ளது என்றாலும் இந்த மாதிரி உடல் நல குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆம் நண்பர்களே எலிகள் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சாப்பிட்டுவிடும் அல்லது கடித்து வைத்துவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள எலிகளை நிரந்தரமாக விரட்ட உதவும் குறிப்பினை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அந்த குறிப்பினை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள எலிகளை நிரந்தரமாக விரட்டி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Homemade Rat Killer in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எலி தொல்லையை போக்குவதற்கு உதவும் எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.
அதற்கு முன்னால் தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
- பாராசிட்டமால் மாத்திரை – 1
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா அப்போ இதை செய்யுங்க போதும்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 1 பாராசிட்டமால் மாத்திரை, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டி கொள்ளுங்கள்.
பேக்கிங் சோடாவை கலக்கவும்:
நாம் அரைத்து வைத்துள்ள பொடியுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை சேர்க்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றினை மட்டும் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எலி தொல்லை அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் இதனை போட்டு வையுங்கள்.
இதனை வாரத்தில் இரு முறை செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் எலி தொல்லையே இருக்காது.
வீட்டின் சுவர் மற்றும் தரையை சட்டுனு கிளீன் செய்ய இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |