ரேஷன் பாமாயில் பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Ration Palm Oil Uses in Tamil..! 

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் ரேஷன் கடையில் கொடுக்கும் பாமாயிலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் ரேஷன் கடையில் கொடுக்கும் பாமாயிலை சிலர் பயன்படுத்த மாட்டார்கள். அது ஆரோக்கியமானதாக இல்லை என்று கூறுகிறார்கள். அதனால் சிலர் இந்த பாமாயிலை பயன்படுத்துவதில்லை. இனி நீங்களும் இந்த பாமாயிலை பயன்படுத்தலாம். அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. அதற்கு நீங்கள் பாமாயிலில் இதை மட்டும் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பாமாயில் நல்லதா..? கெட்டதா..?

ரேஷன் பாமாயில் எப்படி பயன்படுத்துவது..?  

நாம் பயன்படுத்தும் இந்த ரேஷன் பாமாயிலை நேரடியாக பயன்படுத்த கூடாது. இந்த பாமாயிலை நாம் நேரடியாக பயன்படுத்துவதால் அது நமது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால் தான் சிலர் இந்த பாமாயிலை பயன்படுத்துவது இல்லை.

ஆனால் இந்த பாமாயிலுடன் சில பொருட்களை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் வராமல் தடுக்கலாம். அதுபோல அனைவரும் இந்த பாமாயிலை பயன்படுத்தலாம். பாமாயிலை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக…

டிப்ஸ் -1

முதலில் ஒரு பெரிய கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் இந்த பாமாயிலை ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். பாமாயில் நன்றாக சூடான பின் அதில் ஒரு கைப்பிடி அளவு புளி சேர்த்து கொள்ள வேண்டும்.

புளி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் எண்ணெயை ஆற விட்டு அதை பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் இதில் உள்ள கெட்ட தாதுக்கள் நீங்கி விடும்.

டிப்ஸ் -2

அதேபோல் கடாயில் பாமாயிலை ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதனுடன் கல் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்த பின் அதை ஆற விட வேண்டும். பிறகு அதை நீங்கள் பயன்படுத்தலாம். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

டிப்ஸ் -3 

ஒரு கடாயில் பாமாயிலை ஊற்றி எண்ணெய் நன்றாக சூடானதும் அதனுடன் ஒரு கையளவு முருங்கை கீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பாமாயில் நன்றாக கொதித்த பின் அதை ஆற விட்டு வடிகட்ட வேண்டும். பின் இதை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். இதனால் எந்த பாதிப்பும் வராது.

டிப்ஸ் -4 

பாமாயிலுடன் இஞ்சி மற்றும் புளி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதுபோல செய்வதால் இதில் உள்ள தேவையற்ற தாதுக்கள் நீங்கிவிடும். பிறகு நீங்கள் இந்த பாமாயிலை பயன்படுத்தலாம்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement