துரு பிடித்த பாத்திரத்தை ஈசியா பளிச்சென்று ஆக்கலாம்..

Advertisement

துரு பிடித்த பாத்திரத்தை என்ன செய்வது 

பொதுவாக நாம் காசு கொடுத்து வாங்கும் பாத்திரங்களை பார்த்து பார்த்து வைத்திருப்போம். அதில் சிறியதாக கீறல் பட்டாலும் நம்மால் தாங்க முடியாது. அது போல சில பாத்திரங்கள் நாம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துரு பிடிக்க ஆரம்பித்து விடும். அவை சமையல் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளாக இருந்தாலும் சரி துரு பிடித்து விடும். இதனை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பாத்திரம் ஓட்டையாகிவிடும். அதனால் தான் இந்த பதிவில் துரு பிடித்த பாத்திரத்தை எப்படி பளிச்சென்று வைப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க:

பேக்கிங் சோடா:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

துரு பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் பேக்கிங் சோடாவை தூவி விட்டு 1 மணி நேரம் அப்படியே விடவும். ஒரு மணி நேரம் கழித்து ஸ்கிரப் பயன்படுத்தி பாத்திரத்தை நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரை கொண்டு அலச வேண்டும். பேக்கிங் சோடாவிற்கு துருவை அகற்றும் தன்மை உடையது.

வினிகர்:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

துரு பிடித்த பாத்திரத்தில் வினிகரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து ஸ்கிரப் பயன்படுத்தி பாத்திரத்தை நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு பாத்திரம் தேய்க்கும் சோப்பை பயன்படுத்தி ஒரு முறை பாத்திரத்தை வழக்க வேண்டும். பிறகு தண்ணீரை ஊற்றி கழுவி விட்டு காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.

பாத்திரம் அடிபிடிக்காமல் எப்படி சமைப்பது தெரியுமா..?

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா:

பாத்திரங்களில் உள்ள துருவை நீக்க

சாதரணமாக வீட்டில் அடி பிடித்த பாத்திரம் இருந்தாலே அதில் எலுமிச்சை சாறை ஊற்றி சிறிது நேரம் கழித்து பாத்திரத்தை வழக்கினால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும். அடி பிடித்த பாத்திரம் மட்டுமில்லை துரு பிடித்த பாத்திரத்தையும் நீக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு.

அதற்கு ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை துரு பிடித்த பாத்திரத்தில் அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே விடவும். 1 மணி நேரம் கழித்து பாத்திரத்தில் ஸ்கிரப்பை பயன்படுத்தி தேய்த்து விட்டு கழுவினால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தினால் மட்டும் போதும் பாத்திரத்தில் உள்ள துரு நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

பாத்திரம் ஓட்டை ஆகிவிட்டால் தூக்கி போடாதீங்க..! நாமே சரி செய்து விடலாம்..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement